பாக்மதி மாநிலம்
பாக்மதி பிரதேசம் (Province No. 3), புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, 20 செப்டம்பர் 2015 அன்று நிர்வாக வசதிக்காக நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. [1] நேபாள மாநில எண் 3 நேபாள மாநிலங்களில் மூன்றாவதாக அமைந்துள்ளது. இம்மாநிலத்திற்கு பாக்மதி பிரதேசம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரம் ஹெடௌதா ஆகும்.
பாக்மதி மாநிலம்
बागमती प्रदेश பாக்மதி பிரதேசம் | |
---|---|
மேலிருந்து இடப்புறத்திலிருந்து வலப்புறமாக கௌரி சங்கர், கொசைன்குந்தா, பசுபதிநாத் கோவில், பதான் அரண்மனை சதுக்கம், சுயம்புநாதர் கோயில், பக்தபூர் நகர சதுக்கம், அனுமான் தோகா மற்றும் சித்வான் தேசியப் பூங்காவில், காண்டாமிருகங்கள் | |
நேபாளத்தில் பாக்மதி மாநிலத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நேபாளம் |
நிறுவிய நாள் | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | ஹெடௌதா |
பெரிய நகரம் | காட்மாண்டு |
மாவட்டங்கள் | 13 |
அரசு | |
• நிர்வாகம் | பாக்மதி மாநில அரசு |
• ஆளுநர் | விஷ்ணு பிரசாத் பிரசைன் |
• முதலமைச்சர் | தோர்மணி பௌதல் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் |
• மாநில சட்டமன்றம் | ஓர் அவை (110 இடங்கள்) |
• நாடாளுமன்றத் தொகுதிகள் | நேபாள பிரதிநிதிகள் சபை (33) நேபாள தேசிய சபை (8) |
• உயர் நீதிமன்றம் | பதான் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,300 km2 (7,800 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5ஆம் இடம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 55,29,452 |
• தரவரிசை | முதலிடம் |
• அடர்த்தி | 270/km2 (710/sq mi) |
அடர்த்தி தரவரிசை | இரண்டாமிடம் |
இனங்கள் | Upatyakabasi Rajdhani Aaspaaska Nepali |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
புவிசார் குறியீடு | NP-TH |
அலுவல் மொழி | நேபாளி மொழி |
பிற மொழிகள் | நேபால் பாசா, தாமாங் மொழி |
மனித வளர்ச்சி சுட்டெண் | 0.560 (medium) |
எழுத்தறிவு | 74.85% |
பாலின விகிதம் | 98.77 ♂ /100 ♀ (2011) |
இணையதளம் | ocmcm |
இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் காடுகளையும், மலைகளையும், மலைத்தொடர்களையும் கொண்டது. இம்மாநிலத்தில் நேபாளத்தின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு உள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்களால் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும். நேபாள மாநில எண் 3-இன் பரப்பளவு 20,300 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள் தொகை 55,29,452 ஆகவும் உள்ளது[2]
அமைவிடம்
தொகுகாடுகள், மலைகள், மலைத்தொடர்களுடைய 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதிகளையும், தெற்கில் நேபாள மாநில எண் 2யும், கிழக்கில் நேபாள மாநில எண் 1-யும், மேற்கில் நேபாள மாநில எண் 4-யும் எல்லையாகக் கொண்டுள்ளது.
சமயம்
தொகுபாக்மதி மாநிலத்தில் இந்து சமயத்தினர் 71.78%, திபெத்திய பௌத்தம் 23.28%, கிறித்துவம் 2.87%, இசுலாம் 0.67% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.98% ஆக உள்ளனர்.
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
தொகுபாக்மதி மாநிலத்தின் 13 மாவட்டங்கள்
தொகுபாக்மதி மாநிலம் 13 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
அரசியல்
தொகுஇம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்களில் 66 உறுப்பினரகள் நேரடித் தேர்தலிலிலும், 44 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 33 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
முதலமைச்சர்
தொகுமார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியக் கூட்டணி அரசின் தலைவர், தேர்மணி பௌதேல் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். [3]
மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
தொகுஇம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 81 இடங்களையும், நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 29 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அரசியல் கட்சி | நேரடித் தேர்தலில் | விகிதாசாரத்தில் | மொத்தம் | ||||
---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | 42 | 677,317 | 35.81 | 16 | 58 | ||
நேபாளி காங்கிரஸ் | 7 | 559,249 | 29.57 | 14 | 21 | ||
மாவோயிஸ்ட் மையம் | 15 | 316,876 | 16.75 | 8 | 23 | ||
விவேகசீல சஜா கட்சி | 0 | 124,442 | 6.58 | 3 | 3 | ||
ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி | 0 | 59,268 | 3.13 | 1 | 1 | ||
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி | 1 | 41,610 | 2.20 | 1 | 2 | ||
ராஷ்டிரிய பிரஜா தந்திர கட்சி (ஜனநாயகம்) | 0 | 28,855 | 1.53 | 1 | 1 | ||
நயா சக்தி சக்தி | 1 | 23,958 | 1.27 | 0 | 1 | ||
பிறர் | 0 | 59,731 | 3.16 | 0 | 0 | ||
மொத்தம் | 66 | 1,891,306 | 44 | 110 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
- ↑ http://www.statoids.com/unp.html
- ↑ Province 3 CM Poudel takes oath