தாதிங் மாவட்டம்

தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्लाListen, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாதிங்பேசி நகரம் ஆகும். 1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். [1] இமயமலையின் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள தாதிங் மாவட்டம்[2], பிரிதிவி நெடுஞ்சாலை, காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களை இணைக்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையான கோர்க்கா மாவட்டத்தை புத்தி கண்டகி ஆறு பிரிக்கிறது.

நேபாள மாநில எண் 3-இல், பாக்மதி மண்டலத்தில் தாதிங் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தொகு

தாதிங் மாவட்ட எல்லைகள் விவரம்:

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு

தாதிங் மாவட்டத்தில் 80% பண்ணை நிலங்களும் மற்றும் 20% காடுகளும் கொண்டது.

நேபாளப் புவியியல்#Climate[3] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டரகள் 39.7%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 35.1%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 10.8%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 7.7%
Montane ecology#Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள் 3.2%
Snow line 5,000 மீட்டருக்கும் மேல் 2.5%

மக்கள் தொகையியல்

தொகு

1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் தமாங் மற்றும் குரூங் இன மக்களும், தெற்கில் செத்திரி இன மக்களும், மத்தியப் பகுதியில் நேவார் இன மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் நேவாரி மொழி, நேபாள மொழி, தமாங் மற்றும் குரூங் மொழிகள் பேசப்படுகிறது.

ஆன்மீகத் தலங்கள்

தொகு
  • இம்மாவட்டத்தின் வடக்கில் புகழ் பெற்ற திரிபுரசுந்தரி அம்மன் கோயில் உள்ளது.

ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

தொகு
 
தாதிங் மாவட்ட ஊர்களையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

தாதிங் மாவட்டத்தில் ஐம்பத்தி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. "District Development Committee, Dhading".
  3. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதிங்_மாவட்டம்&oldid=3101474" இலிருந்து மீள்விக்கப்பட்டது