ரசுவா மாவட்டம்
ரசுவா மாவட்டம் (Rasuwa District) (நேபாளி: रसुवा जिल्लाⓘ, தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் துன்சே நகரம் ஆகும். துன்சே நகரம், காட்மாண்டு நகரத்திலிருந்து நூற்றி இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். பாக்மதி மண்டலத்தில் அமைந்த ரசுவா மாவட்டத்தின் பரப்பளவு 1,544 ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 43,300 ஆகும். இம்மாவட்டம் 9,778 குடியிருப்பு வீடுகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நேபாள மொழி மற்றும் தமாங் மொழிகள் பேசப்படுகிறது. மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் இமயமலையில் அமைந்த பதினாறு மாவட்டங்களில் சிராஹா மாவட்டம் மிகவும் சிறியதாகும். இமாவட்டத்தின் வடக்கு எல்லையாக திபெத் தன்னாட்சிப் பகுதி அமைந்துள்ளது.
ஒன்பது தொகுதிகளைக் கொண்ட 18 கிராமிய நகராட்சிகள் இம்மாவட்டத்தில் உள்ளது. நெடுஞ்சாலை எண் 21, இம்மாவட்டத் தலைமையிடமான துன்சே நகரத்தை சாலை வழியாக காட்மாண்டு நகரத்துடன் இணைக்கிறது.
பெயர்க் காரணம்
தொகுராசௌவா என்பதற்கு திபெத்திய மொழியில் ரா என்பதற்கு ஆடுகள் என்றும், சௌவா என்பதற்கு புல் மேய்தல் என்று பொருள். இம்மாவட்டம் ஆடுகளுக்கும், மேய்ச்சல் நிலங்களுக்கும் பெயர் பெற்றது. பின்னர் இப்பெயர் ரசுவா என மருவிற்று.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தொகுஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன்#ஆல்ப்ஸ் மலைக் காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் மற்றும் டிரான்ஸ் - இமயமலை பாலவனக் காலநிலை என ஏழு காலநிலைகளில் காணப்படுகிறது. [1] இம்மாவட்டத்தில் காடுகள் 31.43% ஆகவும், என்றும் பனி படர்ந்த பகுதி 16.63% ஆகவும் உள்ளது. [2]
சுற்றுலா
தொகுரசுவா மாவட்டத்தின் வடக்கில் கோசிகுந்தா ஏரி மற்றும் லாங்டங் மலைகள் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் உள்ளது.
கிராமிய நகராட்சிகள்
தொகுரசுவா மாவட்டம் பதினெட்டு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help) - ↑ "Environment Statistics of Nepal, 2011" (PDF). Archived from the original (PDF) on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
- Rasuwa District Profile 2011 பரணிடப்பட்டது 2014-02-11 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- rasuwaonline.com பரணிடப்பட்டது 2010-09-05 at the வந்தவழி இயந்திரம்