மக்வான்பூர் மாவட்டம்

மக்வான்பூர் மாவட்டம் (Makawanpur District) (நேபாளி: मकवानपुर जिल्लाகேட்க), நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். மக்வான்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமான ஹெடௌதா ஒரு துணைநிலை மாநகராட்சியும் ஆகும்.

நேபாளத்தில் பாக்மதி மாநிலத்தில் மக்வான்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றான இம்மாவட்டம் நாராயணி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,426 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்வான்பூர் மாவட்ட மக்கள் தொகை 4,20,477 ஆக உள்ளது. [1] இங்கு நேபாள மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு

மக்வான்பூர் மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று விதமான தட்ப வெப்ப நிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி நிர்வாகம்

தொகு
 
மக்வான்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சியையும் காட்டும் வரைபடம்

மக்வான்பூர் மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்று கிராமிய நகராட்சிகளும், ஹேட்டவுடா என்ற ஒரு நகர்புற நகராட்சியும் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்வான்பூர்_மாவட்டம்&oldid=3101480" இலிருந்து மீள்விக்கப்பட்டது