நேபாளத்தின் மண்டலங்கள்
நேபாளத்தின் மண்டலங்கள், நேபாளத்தின் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களான கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், மத்திய வளர்ச்சி பிராந்தியம், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், மேற்கு வளர்ச்சி பிராந்தியம் மற்றும் தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியங்களின் கீழ் மேச்சி மண்டலம், கோசி மண்டலம், சாகர்மாதா மண்டலம், ஜனக்பூர் மண்டலம், பாக்மதி மண்டலம், நாராயணி மண்டலம், கண்டகி மண்டலம், லும்பினி மண்டலம், தவளகிரி மண்டலம், ராப்தி மண்டலம், பேரி மண்டலம், கர்ணாலி மண்டலம், சேத்தி மண்டலம் மற்றும் மகாகாளி மண்டலம் என பதினான்கு மண்டலங்கள் செயல்படுகிறது. இம்மண்டலங்களின் கீழ் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்கள் உள்ளது. [1]