ஜனக்பூர் மண்டலம்

ஜனக்பூர் மண்டலம் (Janakpur) (நேபாளி: जनकपुर अञ्चल About this soundகேட்க ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் நடு நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும்.

ஜனக்பூர் மண்டலத்தின் மாவட்டங்கள்

ஜனக்பூர் மண்டலத்தில் ஆறு மாவட்டங்கள் உள்ளது. நேபாள மொழி, போஜ்புரி மொழி, மைதிலி மொழி மற்றும் மலைவாழ் மக்கள் மொழிகள் இம்மண்டலத்தில் பேசப்படுகிறது. ஜானகி கோயில் இம்மண்டலத்தின் முக்கிய இந்துக் கோயில் ஆகும்.

மாவட்டங்கள் தொகு

ஜனக்பூர் மண்டலத்தின் தராய் சமவெளியில் தனுஷா மாவட்டம், மகோத்தரி மாவட்டம், சர்லாஹி மாவட்டம், சிந்துலி மாவட்டம், மலைப்பாங்கானப் பகுதியில் ராமேச்சாப் மாவட்டம் மற்றும் இமயமலைப் பகுதியில் தோலகா மாவட்டம் அமைந்துள்ளது.

புவியியல் தொகு

இம்மண்டலத்தின் தெற்கில் தராய் சமவெளிகளும், நடுவில் மலைப்பாங்கான மேட்டு நிலங்களும், வடக்கில் இமயமலைப் பகுதிகள் உள்ளது. இம்மண்டலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதி, தெற்கில் இந்தியா, கிழக்கில் சாகர்மாதா மண்டலம், மேற்கில் பாக்மதி மண்டலம் உள்ளது.

முக்கிய நகரங்கள் தொகு

ஜனக்பூர், கமலாமாய், பீமேஷ்வர், பர்திபாஸ், தால்கேபார், ஜலேஸ்வர், மலங்வா, கௌஷலா பஜார் மற்றும் மைதிலி ஆகியவைகள் ஜனக்பூர் மண்டலத்தின் முக்கிய நகரங்கள் ஆகும்.

தட்ப வெப்பம் தொகு

ஜனக்பூர் மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை மற்றும் மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, என நான்கு நிலைகளில் காணப்படுகிறது. [1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 785: attempt to call field 'set_message' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனக்பூர்_மண்டலம்&oldid=2169180" இருந்து மீள்விக்கப்பட்டது