தனுஷா மாவட்டம்


தனுஷா மாவட்டம் (Dhanusa District), (நேபாளி: धनुषा जिल्ला Listen, மத்திய நேபாளத்த்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும்.

நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 2-இல் தனுஷா மாவட்டத்தின் அமைவிடம்

1180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனுஷா மாவட்டத்தின் மக்கள் தொகை 7,54,777 ஆக உள்ளது. [1] இம்மாவட்டத்தில் பொதுவாக 85% மக்கள் மைதிலி மொழி மற்றும் 4.4% விழுக்காடு மக்கள் நேபாள மொழி பேசுகின்றனர்.

வரலாறு

தொகு

இராமாயண காவியத்தின் நாயகி சீதை பிறந்த ஊர், இம்மாவட்டத்தின் முக்கிய நகரான ஜனக்பூர் ஆகும். ஜானகி கோயில் மற்றும் இராமன்சீதையின் திருமண அரங்கம் ஜனக்பூரில் உள்ளது.

பிற தகவல்கள்

தொகு

இம்மாவட்டம் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் அதிபர் ராம் பரன் யாதவ், இம்மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி எண் 5-இலிருந்து ஏப்ரல் 2008-இல் போட்டியிட்டு வென்றவர். தனுஷா மாவட்டத்தின் தொடருந்து நிலையம், இந்தியாவின் ஜெயா நகருடன் இணைக்கிறது.[2]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு
நேபாளத்தின் புவியியல் மற்றும் தட்ப வெப்ப மண்டலங்கள்[3] உயரம் பரப்பளவு  %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 92.5%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 7.5%

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

தொகு
 
தனுஷா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

தனுஷா மாவட்டம் ஆறு நகராட்சி மன்றங்களையும், 97 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. "Registered Star Hotels". Government of Nepal, Ministry of Tourism and Civil Aviation, Tourism Industry Division. Archived from the original on 2010-04-12. பார்க்கப்பட்ட நாள் 2010-08-09.
  3. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷா_மாவட்டம்&oldid=3557550" இலிருந்து மீள்விக்கப்பட்டது