கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்

கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம் [1], நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான நேபாள பிரதிநிதிகள் சபை 275 உறுப்பினர்களைக் கொண்டது. நேபாள மாநில சட்டமன்றங்களில் 550 உறுப்பினர்கள் உள்ளனர்.

நேரடி தேர்வு முறையில்

தொகு

பிரதிநிதிகள் சபையின் 165 உறுப்பினர்களை, வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம். அதே போன்று நேபாளத்தின் ஏழு மாநிலங்களின் 330 சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக வாக்காளர்கள் தேர்தெடுக்கலாம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில்

தொகு

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், நாடு முழுவதும் பதிவான மொத்த வாக்குகளில், மூன்று சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கு சதவீதம் (%) பெற்ற அரசியல் கட்சிகளின் 110 உறுப்பினர்கள் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவர்.

இதே போன்று ஏழு மாநில சட்டமன்றங்களின் 220 உறுப்பினர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Article 86 (2) Constitution of Nepal

வெளி இணைப்புகள்

தொகு