நேபாள மாநில எண் 1
நேபாள மாநில எண் 1 (Province No. 1) நேபாளத்தின் 7 எண்களின் பெயர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். மாநில எண் 1 நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி, 20 செப்டம்பர் 2015 அன்று துவக்கப்பட்டது.[2][3]17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக விராட்நகர் அறிவிக்கப்பட்டுள்ளது.[4] [5] [6] நேபாளத்தின் கிழக்குப் பகுதியின் இமயமலையில் அமைந்த இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 25,905 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,534,943 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 175.6 ஆக உள்ளது. [7]இம்மாநிலம் 14 மாவட்டங்களைக் கொண்டது.
மாநில எண் 1
प्रदेश न० १ | |
---|---|
நேபாளத்தில் மாநில எண் 1ன் அமைவிடம் | |
மாநில எண் 1 | |
ஆள்கூறுகள்: 26°27′15″N 87°16′47″E / 26.45417°N 87.27972°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 1 |
நிறுவப்பட்டது. | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | விராட்நகர்[1] |
பெரிய நகரங்கள் | விராட்நகர், இதாரி, தரண், தன்குட்டா, வீரதமோத் |
மாவட்டங்கள் | 14 மாவட்டங்கள் |
அரசு | |
• நிர்வாகம் | மாநில எண் 1 அரசு |
• ஆளுநர் | கோவிந்த சுப்பா |
• முதலமைச்சர் | செர்தன் ராய் ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) |
• சட்டமன்ற அவைத் தலைவர் | பிரதீப் குமார் பண்டாரி |
• சட்டமன்றத் தொகுதிகள் |
|
• மாநில சட்டமன்றம் | அரசியல் கட்சிகள்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 25,905 km2 (10,002 sq mi) |
உயர் புள்ளி | 8,848 m (29,029 ft) |
தாழ் புள்ளி | 59 m (194 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 45,34,943 |
• அடர்த்தி | 180/km2 (450/sq mi) |
இனம் | நேபாளிகள் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
புவிசார் குறியீடு | NP-ON |
அலுவல் மொழிகள் | நேபாளி, லிம்பு மொழி மற்றும் ராய் மொழி |
பிற மொழிகள் | ராஜ்வம்சி, லெப்ச்சா, செர்பா முதலியன |
அமைவிடம்
தொகுநேபாளத்தின் தூர-கிழக்கில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவின் பிகார், கிழக்கில் சிக்கிம், தென் மேற்கில் நேபாள மாநில எண் 2, மேற்கில் நேபாள மாநில எண் 3 எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்டங்கள்
தொகுநேபாள மாநில எண் 1-இல் அமைந்துள்ள 14 மாவட்டங்களின் விவரங்கள்:
- 1.. தாப்லேஜங் மாவட்டம்
- 2. பாஞ்சதர் மாவட்டம்
- 3. இலாம் மாவட்டம்
- 4. சங்குவாசபா மாவட்டம்
- 5. தேஹ்ரதும் மாவட்டம்
- 6. தன்குட்டா மாவட்டம்
- 7. போஜ்பூர் மாவட்டம்
- 8. கோடாங் மாவட்டம்
- 9. சோலுகும்பு மாவட்டம்
- 10. ஒகல்டுங்கா மாவட்டம்
- 11. உதயபூர் மாவட்டம்
- 12. ஜாப்பா மாவட்டம்
- 13. மொரங் மாவட்டம்
- 14. சுன்சரி மாவட்டம்
அரசியல்
தொகுஇம்மாநில சட்டமன்றத்தின் 93 சட்டமன்ற உறுப்பினர்களில் 56 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும்; 37 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 28 உறுப்பினர்களையும் தேர்வு செய்கின்றனர்.
இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் செர்தன் ராய் 15 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [8]
சுற்றுலாத் தலங்கள்
தொகு- கஞ்சஞ்சங்கா மலை
- எவரெசுட்டு சிகரம்
- சாகர்மாதா தேசியப் பூங்கா
- கோசி தாப்பு காட்டுயிர் காப்பகம்
மாநில சட்டமன்றத் தேர்தல், 2017
தொகு2017ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இம்மாநில சட்டமன்றத்தின் 93 உறுப்பினர்களுக்கான பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 51 இடங்களையும், மாவோயிஸ்ட் 15 இடங்களை வென்று கூட்டணி அரசு அமைத்துள்ளது. நேபாளி காங்கிரஸ் 21 இடங்களையும், பிற கட்சிகள் ஆறு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
அரசியல் கட்சி | நேரடி தேர்தலில் | விகிசாத்சாரத் தேர்தல் முறையில் | மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||||
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | 36 | 673,709 | 38.79 | 15 | 51 | ||||
நேபாளி காங்கிரஸ் | 8 | 586,246 | 33.76 | 13 | 21 | ||||
மாவோயிஸ்ட் | 10 | 206,781 | 11.91 | 5 | 15 | ||||
நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி | 1 | 70,476 | 4.06 | 2 | 3 | ||||
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி | 0 | 57,342 | 3.30 | 1 | 1 | ||||
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் | 0 | 26,123 | 1.50 | 1 | 1 | ||||
பிறர் | 0 | 115,945 | 6.68 | 0 | 0 | ||||
சுயேட்சைகள் | 1 | 1 | |||||||
மொத்தம் | 56 | 1,736,622 | 100 | 37 | 93 | ||||
Source: Election Commission of Nepal |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Winners root for Biratnagar as provincial capital". thehimalayantimes.com. 18 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ "Nepal Provinces". statoids.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
- ↑ Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
- ↑ Biratnagar celebrates its status of provincial capital
- ↑ "Locals intensify protest in Dhankuta after Biratnagar named as provincial HQ". kathmandupost.ekantipur.com. 19 January 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
- ↑ "Nepal government announces Provincial Capitals and Chiefs". ddinews.gov.in. 17 January 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
- ↑ "Province 1: Call for opportunities in land of great promise". Kantipur Publications Pvt. Ltd. 12 August 2015. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017.
- ↑ Rai sworn in as Province 1 chief minister