ஜாப்பா மாவட்டம்

ஜாப்பா மாவட்டம் (Jhapa District) (நேபாளி: झापा जिल्लाAbout this soundListen ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தின், மேச்சி மண்டலத்தின் தராய் சமவெளியில் மாநில எண் 1-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையிட நகரம் பத்திரப்பூர் ஆகும். இதன் மற்றொரு நகரம் மேச்சிநகர் ஆகும்.

நேபாள நாட்டின் மாநில எண் 1 – இல் அமைந்த ஜாப்பா மாவட்டத்தின் அமைவிடம்

இதன் பரப்பளவு 1606 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாபா மாவட்ட மக்கள் தொகை 8,12,650 ஆகும். [1] இம்மாவட்டத்தில் பேசப்படும் மொழிகள் நேபாள மொழி, லிம்பு மொழி மற்றும் ராஜ்பன்சி மொழிகளாகும். இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து அதிக பட்சம் 506 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாப்பா_மாவட்டம்&oldid=2521665" இருந்து மீள்விக்கப்பட்டது