முதன்மை பட்டியைத் திறக்கவும்

சோலுகும்பு மாவட்டம்

நேபாளத்தில் சோலுகும்பு மாவட்டத்தின் அமைவிடம்

சோலுகும்பு மாவட்டம் (Solukhumbu District) (நேபாளி: सोलुखुम्बु जिल्लाAbout this soundகேட்க , செர்ப்பா: வார்ப்புரு:ཤར་ཁུམ་བུ་རྫོང་ཁ།, தெற்காசியாவில் உள்ள நேபாள நாட்டின், கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 1-இல், சாகர்மாதா மண்டலத்தில் அமைந்துள்ளது. சோலுகும்பி மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். சோலு மற்றும் கும்பு பகுதிகளை உள்ளடக்கியதே சோலுகும்பு மாவட்டாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சல்லேரி நகரம் ஆகும்.


சாகர்மாதா மண்டலத்தில் அமைந்த சோலுகும்பு மாவட்டத்தின் பரப்பளவு 3,312 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,05,886 ஆகும்.[1]

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம், இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சாகர்மாதா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.

கிராதர்கள் என அழைக்கப்படும் உள்ளூர் இராய் மற்றும் செட்டிரி மலைவாழ் இன மக்கள் இமயமலையின் நடுவிலும், செர்ப்பா இன மக்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

சோலுகும்பு மாவட்டத்தில் 1953-இல் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த டென்சிங் நோர்கே

1953-இல் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால் பதித்த டென்சிங் நோர்கே, சோலுகும்பு மாவட்டத்தில் வளர்ந்தவர் ஆவார்.

சுற்றுலாதொகு

 
சோலுகும்பு வானூர்தி நிலையம்

மலையேற்ற வீரர்களுக்கும், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு இம்மாவட்டம் சிறப்பிடம் வகிக்கிறது. இமயமலையில் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் கொடுமுடியை நேபாளம் வழியாக மலை ஏறும் வெளி நாட்டுச் மலையேற்ற வீரர்களுக்கு சோலுகும்பு மாவட்டம் புகழிடமாக உள்ளது. இம்மாவட்டத்தின் செர்ப்பா இன இளைஞர்கள் மலையேற்ற வீரர்களுக்கு துணையாகச் செல்கின்றனர். இம்மாவட்டத்தின் சாகர்மாதா தேசியப் பூங்காவை, யுனேஸ்கோவால் இயற்கையாக அமைந்த உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது.[2]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்தொகு

சோலுகும்பு மாவட்டம் இமயமலையில் 300 மீட்டர் உயரத்திலிருந்து 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [3]


கிராம வளர்ச்சி மன்றங்கள்தொகு

 
சோலுகும்பு மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

சோலுகும்பு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக தூத்குந்தா எனும் ஒரு நகராட்சி மன்றமும், முப்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்களும் செயல்படுகிறது.[4]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலுகும்பு_மாவட்டம்&oldid=2608020" இருந்து மீள்விக்கப்பட்டது