2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

(நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நேபாளத்தில் இறுதியாக 2011-ஆம் ஆண்டில் நேபாள மைய புள்ளியியல் துறையால் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. [2] 75 நேபாள மாவட்டங்களில் உள்ள 58 மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும், 3915 கிராமிய நகராட்சிகளிலும் எடுக்கப்பட்ட மக்கள்தொகை, குழந்தைகள், வயது, பாலினம், மணஞ்சார் தகுதிநிலை, எழுத்தறிவு, கல்வி, வீட்டு வசதிகள், மொழி, இனம், சார்ந்திருக்கும் சமயம், சாதி, பார்க்கும் வேலைத் தரம், தொழில், வணிகம் போன்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகையியல் (Demography) தயாரிக்கப்பட்டது. [3]

2011 நேபாள்
மக்கட்தொகை கணக்கெடுப்பு
பொதுத் தகவல்
நாடுநேபாளம்
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை26,494,504 (1.35%[1])
அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் மத்திய வளர்ச்சி பிராந்தியம் (9,656,985)
குறைந்த மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், (2,552,517)

மக்கள் தொகை தொகு

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி;

  • நேபாளத்தின் மொத்த மக்கள்தொகை: 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு) ஆகும். [4] [5][6]
  • 2001 - 2011 பத்தாண்டில் மக்கள் தொகை வளர்ச்சி: 3,343,081
  • ஆண்டு சராசரி மக்கட்தொகை வளர்ச்சி விகிதம்: 1.35%
  • வீடுகளின் எண்ணிக்கை: 5,427,302
  • ஒரு வீட்டின் சராசரி அளவு: 4.88 சமீ
  • உயரமான மலைகளில் மக்கள்தொகை: 6.73%, மலைக்குன்றுப் பகுதிகளில்: 43.00% மற்றும் சமவெளிகளில்: 50.27%.

மொழிகளும், இன மக்களும் தொகு

நேபாளத்தில் நேபாள மொழி, நேபால் பாசா, போஜ்புரி மொழி, லிம்பு மொழி மற்றும் ராஜ்பன்சி, குரூங், நேவாரி மொழி, ராய் மொழி, தாமாங் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி, திபெத்திய மொழி, மஹர் மொழி, மைதிலி மொழி பேசும் சேத்திரி, தாரு, நேவார், செர்ப்பா இனக்குழுக்களும், இந்துக்கள் (80%), பௌத்தர்கள் (9%), இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சமயம் சாராத கிராந்தி மக்கள் போன்ற மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு