செல்லையா பொன்னத்துரை
செல்லையா பொன்னத்துரை (Selliah Ponnadurai, 25 ஏப்ரல் 1935 – 15 ஆகத்து 2013) என்பவர் இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் ஆவார். இவர் 1985 முதல் 1993 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்ட ஆட்டங்களிலும், 1983 முதல் 1993 வரை எட்டு ஒருநாள் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.[1]
செல்லையா பொன்னத்துரை Selliah Ponnadurai | |
---|---|
பிறப்பு | யாழ்ப்பாணம், இலங்கை | 25 ஏப்ரல் 1935
இறப்பு | 15 ஆகத்து 2013 | (அகவை 78)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | துடுப்பாட்ட நடுவர் |
அறியப்படுவது | தேர்வு நடுவர்: 3 (1985–1993) ஒருநாள் நடுவர் 8 (1983–1993) |
இலங்கை 1985 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற முதலாவது தேர்வுப் போட்டியின் நடுவராக பொன்னத்துரை பணியாற்றியிருந்தார்.[2] நடுவர் பியதாச வித்தானகமகேயுடன் இணைந்து கொழும்பில் இலங்கை அணி விளையாடிய இரண்டாவது தேர்வுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றியிருந்தார். இப்போட்டியில் இலங்கை 149 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[2]
இந்தியாவிற்கு எதிராக இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், பாக்கித்தானுக்கு எதிராக ஒரு தேர்வுப் போட்டியிலும் இவர் பங்குபற்றியிருந்தார்.[2]
யாழ்ப்பாணத்தில் பிறந்த பொன்னத்துரை யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்லூரித் துடுப்பாட்ட அணியில் வலக்கைத் துடுப்பாட்டக்காரராகவும், வலக்கை பந்துவீச்சாளராகவும் விளையாடியுள்ளார். இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் 2013 ஆகத்து 15 இல் காலமானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Selliah Ponnadurai". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2013-07-14.
- ↑ 2.0 2.1 2.2 SL umpire Ponnadurai dies, aged 78, டெய்லிமிரர், ஆகத்து 16, 2013
- ↑ http://www.espncricinfo.com/srilanka/content/story/662617.html