மோதிலால் நேரு

இந்திய அரசியல்வாதி

மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.

பண்டித்
மோதிலால் நேரு
காங்கிரஸ் தலைவர்
பதவியில்
1919–1920
முன்னையவர்சையத் ஹாசன் இமாம்
பின்னவர்லாலா லஜபத் ராய்
பதவியில்
1928–1929
முன்னையவர்முக்தர் ஹமீத் அன்சாரி
பின்னவர்ஜவகர்லால் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைவழக்கறிஞர், இந்தியச் சுதந்திர போராளி

அரசியல் தொகு

 
தனது குடும்பத்தினருடன் நடுவில் அமர்ந்திருக்கும் மோதிலால் நேரு

காஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்கெதிராய் போராடினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928ல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர். இவர் ஐரோப்பிய நாகரிகத்தை பின் பற்றினார் .முன்கோபம் உள்ளவர்.இவர் தமது இருபதாவது வயதில் லாகூரில் காஷ்மீரத்துப் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார் .ஒரு ஆண் மகவைப் பிரசவித்த பின் அந்தப் பெண் இறந்து விட்டாள் .பின் அந்த குழந்தையும் இறந்துவிட்டது .இவரது இரண்டாம் மனைவி துஸ்சூ என்ற பெயருடைய சொரூப ராணியைத் திருமணம் செய்து கொண்டார் .

குடும்பம் தொகு

இவரது துணைவியார் பெயர் சொரூப ராணி ஆவார். 1889ல் ஜவகர்லால் நேரு என்ற ஒரு புதல்வரும், 1900ல் பிறந்த விஜயலட்சுமி பண்டிட் மற்றும் 1907ல் பிறந்த கிருட்டிணா அதீசிங் என்ற இரு புதல்விகளும் இவருக்குண்டு.

மேற்கோள்கள் தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; congressbio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிலால்_நேரு&oldid=3926389" இலிருந்து மீள்விக்கப்பட்டது