பிரகாசு மெகரோத்ரா
பிரகாசு மெகரோத்ரா (Prakash Mehrotra)[1] (26 பிப்ரவரி 1925 - 7 மார்ச் 1988) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 ஏப்ரல் 1976 முதல் ஆகத்து 9, 1981 வரை உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் அசாம் மற்றும் மேகாலயாவின் ஆளுநராக 10 ஆகத்து 1981 முதல் 28 மார்ச் 1984 வரை பணியாற்றினார்.[2][3] இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இவர் பிரீத்தி மெகரோத்ராவை மணந்தார். இவர்களுக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளார். இவருடைய மகன், இரவி பிரகாசு மெகரோத்ரா, இந்திய உச்ச நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராக உள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "High Commission of India, London, United Kingdom : Former High Commissioners of India to the United Kingdom". www.hcilondon.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
- ↑ "Governors of Assam since 1937 onwards". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "Former Governors Meghalaya". Rajya Bhavan Meghalaya. 13 December 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "Rajya Sabha Members" (PDF). Rajya Sabha. 2003. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.