சூன் 26
நாள்
(26 ஜூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 26 (June 26) கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான்.
- 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார்.
- 684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர்.
- 1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார்.
- 1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.
- 1460 – வாரிக் பிரபு ரிச்சார்டு நெவில், மார்ச் பிரபு எட்வர்டு ஆகியோர் தமது படைகளுடன் இங்கிலாந்து திரும்பி, இலண்டனுக்கு சென்றனர்.
- 1483 – மூன்றாம் ரிச்சர்டு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார்.
- 1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ லிமாவில் கொல்லப்பட்டார்.
- 1718 – உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் மகன் அலெக்சி பெத்ரோவிச் தந்தையினால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மர்மமான முறையில் மரணமடைந்தான்.
- 1723 – பக்கூ நகரம் உருசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
- 1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன.
- 1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.[1][2]
- 1830 – நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.
- 1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.
- 1870 – ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
- 1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.
- 1924 – ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.
- 1936 – முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1945 – ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.
- 1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.
- 1960 – முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.
- 1960 – மடகாசுகர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1974 – உலகளாவிய தயாரிப்புக் குறியீடு முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
- 1976 – கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
- 1977 – எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.
- 1978 – டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
- 1991 – யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.
- 1995 – கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.
- 1995 – அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- 2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.
- 2007 – திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தம் கொண்டுவந்தார்.
- 2012 – கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயின, இருவர் உயிரிழந்தனர்.
- 2013 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14வது திருத்தத்தின் படி ஒரு-பால் இணையரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.
பிறப்புகள்
தொகு- 1730 – சார்லசு மெசியர், பிரான்சிய வானியலாளர் (இ. 1817)
- 1797 – இமாம் சாமீல் செச்சினிய முஸ்லிம் அரசியல் தலைவர் (இ. 1817)
- 1824 – வில்லியம் தாம்சன், அயர்லாந்து-இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1907)
- 1873 – கௌஹர் ஜான், இந்தியப் பாடகி, நடனக் கலைஞர் (இ. 1930)
- 1874 – சாகு மகாராசர், கோல்காப்பூர் அரசர் (இ. 1922)
- 1892 – பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1973)
- 1904 – செருக்களத்தூர் சாமா, தமிழக நடிகர், பாடகர்
- 1906 – ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)
- 1908 – சால்வடோர் அயேந்தே, சிலியின் 29வது அரசுத்தலைவர் (இ. 1973)
- 1914 – இலைமன் சுட்டிராங் சுபிட்சர், அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர், மலையேறி (இ. 1997)
- 1916 – செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர், கேரள கதகளி நடனக் கலைஞர்
- 1924 – இளையபெருமாள், தமிழக தலித் அரசியல்வாதி (இ. 2005)
- 1930 – சு. சபாரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2013)
- 1939 – அப்துல் ஜப்பார், தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (இ. 2020)
- 1943 – யாரொசுலாவ் வாச்செக், செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (இ. 2017)
- 1954 – ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி, இந்திய அரசியல்வாதி
- 1960 – சுரேஷ் கோபி, மலையாள நடிகர்
- 1962 – ஒலாண்டா உமாலா, பெரு அரசியல்வாதி
- 1993 – அரியானா கிராண்டி, அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
தொகு- 1274 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர், எழுத்தாளர் (பி. 1201)
- 1541 – பிரான்சிஸ்கோ பிசாரோ, எசுப்பானிய நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1471)
- 1796 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர் (பி. 1732)
- 1827 – சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (பி. 1753)
- 1830 – நான்காம் ஜார்ஜ், ஐக்கிய இராச்சிய மன்னர் (பி. 1762)
- 1856 – மக்சு இசுரேனர், செருமானிய மெய்யியலாளர் (பி. 1806)
- 1932 – அடிலைடே அமெசு, அமெரிக்க வானியலாளர் (பி. 1900)
- 1943 – கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய மருத்துவர் (பி. 1868)
- 1972 – எம். எம். தண்டபாணி தேசிகர், தமிழிசைக் கலைஞர் (பி. 1908)
- 1975 – ஓசேமரிய எஸ்கிரிவா, எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1902)
- 1985 – செ. எ. ஆனந்தராஜன், இலங்கைத் தமிழ் கல்வியாளர் (பி. 1932)
- 2010 – டி. சுதர்சனம், தமிழக அரசியல்வாதி (பி. 1941)
- 2015 – கே. எம். பஞ்சாபிகேசன், இலங்கை நாதசுரக் கலைஞர் (பி. 1924)
சிறப்பு நாள்
தொகு- விடுதலை நாள் (மடகாசுகர், பிரான்சிடம் இருந்து 1960)
- விடுதலை நாள் (சோமாலியா பிரித்தானியாவிடம் இருந்து, 1960)
- சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
- போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Historical record of The Nineteenth, or, The First Yorkshire North Riding Regiment of Foot, Richard Cannon