முதன்மை பட்டியைத் திறக்கவும்

குவாஜா முகம்மது இப்னு முகம்மது இப்னு ஹசன் தூசீ (Khawaja Muhammad ibn Muhammad ibn Hasan Tūsī, 18 பெப்ரவரி 1201 – 26 சூன் 1274), சுருக்கமாக நசீருத்தீன் அத்-தூசீ (Nasīr al-Dīn Tūsī, பாரசீகம்: نصیر الدین طوسی; அல்லது துசி), என்பவர் பாரசீக பல்துறை வல்லுனரும், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரும்[1] ஆவார். இவர் தடம் பதித்த துறைகள்: கட்டடக்கலை, வானவியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், இசுலாமிய மெய்யியல், அறிவியல், இறையியல் போன்றவையாகும். இசுலாமிய அறிஞர் இப்னு கல்தூன் (1332–1406) இவரை மிகப் பெரும் பாரசீக அறிஞர் எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]

பாரசீக இசுலாமிய அறிஞர்
நசீருத்தீன் அத்-தூசீ
Nasīr al-Dīn Tūsī
பட்டம் குவாஜா நசீர்
பிறப்பு

பெப்ரவரி 18, 1201(1201-02-18)

(11 ஜமாதி அல்-ஊலா, 597)
இறப்பு 26 சூன் 1274(1274-06-26) (அகவை 73) (18 துல்-ஹிஜ்ஜா 672)
இனம் பாரசீகர்
காலம் இசுலாமியப் பொற்காலம்
பிராந்தியம் ஈரான்
சட்டநெறி சியா
சமய நம்பிக்கை இப்னு சீனா
முதன்மை ஆர்வம் இசுலாமிய இறையியல், இசுலாமிய மெய்யியல், வானியல், கணிதம், வேதியியல், மருத்துவம், இயற்பியல், அறிவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு
படிவளர்ச்சிக் கொள்கை, கோளவியல் முக்கோணவியல், துசி-இணை
ஆக்கங்கள் Rawḍa-yi Taslīm, Tajrid al-'Aqaid,
Akhlaq-i-Nasri, Zij-i ilkhani,
al-Risalah al-Asturlabiyah,
Al-Tadhkirah fi'ilm al-hay'ah

மேற்கோள்கள்தொகு

  1. "Tusi, Nasir al-Din. " Encyclopædia Britannica. 2007. Encyclopædia Britannica Online. 27 December 2007 <http://www.britannica.com/eb/article-9073899>
  2. James Winston Morris, "An Arab Machiavelli? Rhetoric, Philosophy and Politics in Ibn Khaldun’s Critique of Sufism", Harvard Middle Eastern and Islamic Review 8 (2009), pp 242–291. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீருத்தீன்_அத்-தூசீ&oldid=2298903" இருந்து மீள்விக்கப்பட்டது