டி. சுதர்சனம்

இந்திய அரசியல்வாதி

டி. சுதர்சனம் (D. Sudarsanam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1941/1942 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு அமர்நாத், கோபிநாத், அரவிந்து என மூன்று மகன்கள் உள்ளனர்.

காங்கிரசுடன் அரசியல் வாழ்க்கை

தொகு

சுதர்சனம் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] மேலும் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு(மூப்பனார்) கட்சியின் வேட்பாளராக பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

தமிழ்மாநில காங்கிரசுடன் அரசியல் வாழ்க்கை

தொகு

இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரசு உருவானபோது இவர் ஜி. கே. மூப்பனாரைப் பின்பற்றி அவருக்கு உறுதுணையாக நின்றார். அக்கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். இவர் திருவள்ளூர் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு, மூப்பனார் கட்சியின் வேட்பாளராக 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழ் மாநில காங்கிரசு கட்சியானது இந்திய தேசிய காங்கிரசில் இணையும்வரை அக்கட்சியிலேயே இருந்தார்[3][4]

காங்கிரசு சட்டமன்ற கட்சித் தலைவர்

தொகு

2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகபோட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5][6][7] 2006 தேர்தலுக்குப்பின் இவர் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

இறப்பு

தொகு

2010 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் போது இவர் உடல் சுகவீனம் அடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோயம்பத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பல்லுருப்பு செயலிழப்பு காரணமாக உயிர் நீத்தார். இறக்கும்போது இவருக்கு வயது 68 ஆகும்.[8]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சுதர்சனம்&oldid=3522582" இலிருந்து மீள்விக்கப்பட்டது