கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்

கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner, சூன் 14, 1868 - சூன் 26, 1943) ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் ஆவார்[1]. குருதி வகைகளைக் கண்டறிந்தமைக்காக இவர் உலகெங்கிலும் அறியப்படுகிறார். இதற்காக 1930 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது[2]. மேலும் இவர் 1909 ஆம் ஆண்டு இர்வின் பாப்பருடன் இணைந்து போலியோ வைரசையும் கண்டறிந்தார்.

கார்ல் லாண்ட்ஸ்டெய்னர்
LandsteinerWS.jpg
பிறப்புசூன் 14, 1868(1868-06-14)
வியன்னா, ஆஸ்திரியா
இறப்புசூன் 26, 1943(1943-06-26) (அகவை 75)
நியூயார்க் நகரம்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைமருத்துவம், வைராலஜி
பணியிடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
ராக்ஃபெல்லர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நியூயார்க்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுருதி வகைகளைக் கண்டறிந்தமை

Rh காரணியைக் கண்டறிந்தமை

போலியோ வைரசுதனைக் கண்டறிந்தமை
விருதுகள்மருத்துவத்திற்கான நோபல் பரிசு (1930)

1900 ஆம் ஆண்டில் லாண்ட்ஸ்டெய்னர் இரு வேறு மனிதர்களின் இரத்தத்தைக் கலக்கும் போது சில உறைவதையும் சில உறையாதிருப்பதையும் கண்டுற்றார். மேற்கொண்டு இதை ஆராய்ந்ததில் அவர் ABO குருதி வகை அமைப்பைக் கண்டறிந்து லாண்ட்ஸ்டெய்னர் விதிகள் என அறியப்படும் ஒப்பற்ற இரு விதிகளை அளித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடிப்பே நியூயார்க்கில் நடத்தப்பட்ட முதல் வெற்றிகரமான குருதியேற்றத்திற்கு வழிகோலியது.

மேற்கோள்கள்தொகு

  1. ""Karl Landsteiner - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Karl Landsteiner - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.