இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட் என்பவர் திருத்தந்தையாக 684 முதல் 685 வரை இருந்தவர். இவர் இரண்டாம் லியோவின் இறப்புக்கு பின் 683இல் தேர்வு செய்யப்பட்டாலும் நான்காம் கான்ஸ்டன்டைன் மன்னனின் ஒப்புதலைப் பெற காலதாமதம் ஆனதால் 684இல் பதவி ஏற்றார்.
திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 26 ஜூன் 684 |
ஆட்சி முடிவு | 8 மே 685 |
முன்னிருந்தவர் | இரண்டாம் லியோ |
பின்வந்தவர் | ஐந்தாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பெனடிக்டுஸ் செபெலுஸ் |
பிறப்பு | 635 உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு |
இறப்பு | உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு | 8 மே 685
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
Monothelitism என்னும் பதித்த கொள்கையினை அடக்க 678இல் நடந்த மூன்றாம் கான்ஸ்டன்டைன் பொதுச்சங்கத்தில் அந்தியோக்கு நகர ஆயரை திருச்சபையை விட்டு விலக்கினார்.
இவர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே திருத்தந்தையாக இருந்த போதிலும், உரோமை நகரில் பல கோவில்களை இவர் சீரமைத்தார் என்பர். இவர் 8 மே 685இல் இறந்தார்.