ஐந்தாம் யோவான் (திருத்தந்தை)
திருத்தந்தை ஐந்தாம் யோவான் (இலத்தீன்: Ioannes V; 635 – 2 ஆகஸ்ட் 686) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஜூலை 685 முதல் 686இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார்.[1] பைசாந்தியப் பேரரசரின் அனுமதியில்லாமல் பதவியேற்ற பத்து திருத்தந்தையருள் இவர் முதலாமவர் ஆவார். இவரின் ஆட்சியில் உரோமை நகருக்கும் பைசாந்தியப் பேரரசுக்கும் இடையே ஒற்றுமை நிலவியது.
திருத்தந்தை ஐந்தாம் யோவான் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 12 ஜூலை 685 |
ஆட்சி முடிவு | 2 ஆகஸ்ட் 686 |
முன்னிருந்தவர் | இரண்டாம் பெனடிக்ட் |
பின்வந்தவர் | கோனோன் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | 635 Syria, பைசாந்தியப் பேரரசு |
இறப்பு | உரோமை நகரம் | 2 ஆகத்து 686
யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவர் ஆந்தியோக்கியாவில் பிறந்த ஒரு சிரியன் கிறிஸ்தவர் ஆவார். இவருடைய கிரேக்க மொழியின் புலமையால் மூன்றாம் ஆயர்களின் பேரவைக்கு அப்போதைய திருத்தந்தையின் பிரதிநிதியாக கான்ஸ்டாண்டிநோபிலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "திருத்தந்தை ஐந்தாம் யோவான்". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.