டேவிட் ரிட்டன்ஹவுஸ்

டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) என்றறியப்படும் (1732 ஏப்ரல் 08 - 1796 சூன் 26) இவர், அமெரிக்க வானியல் நிபுணரும், பல அறிவியல் கருவிகளை கண்டறிந்தவரும், அளவையாளரும் மற்றும் கணித மேதையாகவும் அறியப்படுகிறார்.[1] மேலும், அறிவியல் கருவி கைவினைஞர் மற்றும் பொது அதிகாரியாகவும், பணியாற்றிய டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்கன் பிலோசபிக்கல் சொசைட்டியின் (American Philosophical Society) உறுப்பினராகவும் மற்றும் அமெரிக்க மின்ட்டின் (United States Mint) முதல் இயக்குநராக இருந்துள்ளதாக அறியப்படுகிறார்.[2]

டேவிட் ரிட்டன்ஹவுஸ்
Charles Willson Peale - David Rittenhouse - Google Art Project.jpg
டேவிட் ரிட்டன்ஹவுஸ்
பிறப்புஏப்ரல் 8, 1732(1732-04-08)
பேப்பர் மில் ரன்,  பென்சில்வேனியா
இறப்புசூன் 26, 1796(1796-06-26) (அகவை 64)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
பணிவானவியலாளர், கண்டுபிடிப்பாளர், கணித மேதை

பிறப்பும் படிப்பும்தொகு

டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பிலடெல்பியா நகரத்தின் அருகேயுள்ள "பேப்பர் மில் ரன்" என்னுமிடத்தில், 1732-ம் ஆண்டு ஏப்ரல் 08-ம் நாள் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக முறையாக பள்ளிக்கு செல்ல இயலாத ரிட்டன்ஹவுஸ். கணிதம், இயந்திரங்கள் குறித்து ஒரு உறவுக்காரரிடம் கற்றறிந்தார். அவ்வுறவுக்காரர், (டேவிட் வில்லியம்ஸ் (மாமா) தன்னிடம் இருந்த சில புத்தகங்கள், மாற்றும் பல கருவிகள் அடங்கிய பெட்டியையும் கொடுத்தார். தனது கைத்தொழிலான மரவேலைகளை செய்துகொண்டே அளவற்ற கணிதப் புத்தகங்கள் படித்தவர் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படித்து ஆழமான இயற்பியல் அறிவையும், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் அபாரத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.[2]

கண்டுபிடிப்பும் தயாரிப்பும்தொகு

அறிவுக்கூர்மை மிக்க டேவிட், நீர் ஆலையின் மாதிரி ஒன்றை 8 வயதில் வடிவமைத்தார். மேலும், 17 வயதில், முதலில் ஒரு மர கடிகாரத்தையும் பின்னர் ஒரு பித்தளை கடிகாரத்தையும் உருவாக்கினார். தந்தையின் வயலில் ஒரு ஆய்வுகூடத்தை தொடங்கி. அங்கு உயரமான, துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரங்களை தயாரித்து விற்றார். ஜெனித் சுற்றுக்கண்டம் (Zenith Sector), தொலைநோக்கி (Telescope)[3] போன்ற வானியல் ஆய்வுகளுக்கான கருவிகளை உருவாக்கினார். அளவுருக்கள் (Parameters), உலோக உறை வெப்பமானி (Metallik Pocket Thermometer), ஹைக்ரோமீட்டர் (Haikrometers) உள்ளிட்ட கருவிகளையும் தயாரித்தார். இவை 1770-களில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகம் விற்பனையாகின.[3]

பல்வேறு வகையான திசையறி கருவிகளை (Compass) தயாரித்த ரிட்டன்ஹவுசு. வெர்னியர் கண்காணிப்பு திசையறி கருவியையும் (Vernier Tracking Compass) உருவாக்கியவர் என கூறப்படுகிறது. தேசிய பொது நிலங்களை கணக்கெடுக்க, இவரது பெயரிலான ‘ரிட்டன்ஹவுஸ் மேம்படுத்தப்பட்ட திசையறி கருவிகளை’ அரசு பயன் படுத்தியது.[1] இதன் காரணமாக டேவிட் ரிட்டன்ஹவுசை பிலடெல்பியா நகர சர்வேயராக 1774-ல் நியமிக் கப்பட்டார். வானியல் கண்காணிப்புக்காக அமெரிக்க தத்துவவியல் சங்கம் (American Philosophical Society) ஒருசில இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்தன. இவற்றில் ஒன்று இவரது வீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை இவர் தனக்காகவும், மற்ற கண்காணிப்பாளர்களுக்காகவும் தயாரித்தார். இதற்காக இவர் தயாரித்த தொலைநோக்கிதான் அமெரிக்காவின் முதல் தொலைநோக்கி என்று கருதப்படுகிறது.[4]

வானியல் ஆய்வுகள்தொகு

டேவிட் ரிட்டன்ஹவுஸ் மற்ற நடுவங்களிலும் வானியல் கண்காணிப்புகளுக்காக கருவிகளைப் பொருத்த உதவி செய்தார். பிலடெல்பியாவில் 1770-ல் நிரந்தரமாகக் குடியேறிய அவர், அங்கு மற்றொரு கண்காணிப்பு நிலையம் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டார். புதன் (Mercury), வியாழன் (Jupiter), யுரேனசு (Uranus) ஆகிய கோள்களின் பாதைகளைக் கண்காணித்த டேவிட், விண்கற்கள், வால்நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்மூலம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.[5]

ஆய்வுக்கட்டுரைதொகு

‘ஆன் ஈஸி மெத்தட் ஃபார் டிடக்டிங் தி ட்ரூ டைம் ஆஃப் தி சன்ஸ் பாசிங் தி மெரிடியன்’ என்ற நூலை வெளியிட்டார். காந்த சக்தி, மின்சாரம் குறித்த சோதனைகளை 1784-ல் மேற்கொண்டார். தனது முதல் கணிதக் கட்டுரையை 1792-ல் வெளியிட்டார். பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன.

மறைவுதொகு

படித்துப் பெரிய பட்டங்களைப் பெறாமலேயே தனது திறமையால் பல சாதனை களை நிகழ்த்தியவரும், 18-ம் நூற்றாண்டின் முன்னணி வானியலாளருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் தனது 64-வது வயதில் 1796-ஆண்டு மறைந்தார்.[6]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "American National Biography Online". anb.org (ஆங்கிலம்) (Feb. 2000.). பார்த்த நாள் 19 மே 2016.
  2. 2.0 2.1 "PENN BIOGRAPHIES". archives.upenn.edu (ஆங்கிலம்) (1995-2013). மூல முகவரியிலிருந்து 2015-04-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 மே 2016.
  3. 3.0 3.1 "Rittenhouse Farm Historical Marker". explorepahistory (ஆங்கிலம்) (2011). பார்த்த நாள் 20 மே 2016.
  4. "David Rittenhouse Tall Case Clock". americanhistory.si.edu (ஆங்கிலம்) (2001). பார்த்த நாள் 21 மே 2016.
  5. David Rittenhouse | builder of one of the first American observatories | (ஆங்கிலம்) பார்த்த நாள் மே 21 2016
  6. "David Rittenhouse Facts". biography.yourdictionary.com (ஆங்கிலம்) (1980, 1964.). பார்த்த நாள் 21 மே 2016.

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ரிட்டன்ஹவுஸ்&oldid=3214742" இருந்து மீள்விக்கப்பட்டது