கண்டிப் போர்கள்

கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மார்ச் 2 1815 இல் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) ஆவான். பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் பின்பு கண்டி இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பல திட்டங்களைத் தீட்டினர். இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் கண்டி இராச்சியத்தை கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.

19ம் நூற்றாண்டில் இலங்கை

கண்டிப் போர்கள் தொகு

கண்டிப் போர்கள்
 
இரண்டாம் கண்டிப் போர் சம்பவத்தின்போது இந்திய துணைக்கண்டம்; பிரித்தானிய கட்டுப்பாட்டில் முழு இலங்கையும் காட்டப்பட்டுள்ளது.
நாள் 1796 - 1818
இடம் கண்டி இராச்சியம்
முடிவு பிரித்தானிய படைகளின் வெற்றி, சிங்களவர்களின் சுதந்திரம் முடிவடைந்தது.[1]
பிரிவினர்
  கண்டி இராச்சியம்   பிரித்தானியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
விக்கிரம ராஜசிங்கன்   கே மக்டவல்
  அடம் டேவி
  பி.ஜி. பாபட்

கண்டிப் போர்கள் கி.பி 1796 தொடக்கம் கி.பி 1818 வரை ஆங்கிலேயரின் படைக்கும் இலங்கையின் கண்டி இராச்சிய படைக்கும் இடையில் இடம்பெற்ற போர்களாகும். இது பெரும்பாலும் 1803-1815 வரை ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்ற கண்டி மீது படையெடுத்த சம்பவங்களைக் குறிக்கும்.

பின்னணி தொகு

1795 இல் இலங்கையில் உரிமை கொண்ட நெதர்லாந்தின் கட்டுப்பாட்டிலுள்ள தந்திரோபாய முக்கியத்துவமிக்க திருகோணமலை துறைமுகத்தை, நெதர்லாந்து மீதான பிரான்சின் கட்டுப்பாடானது அவர்களுக்கு மாற்றிவிடும் என்று பிரித்தானியா அஞ்சியது. திருகோணமலை மாத்திரமல்லாது மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் முழு கரையோரங்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.[2]

கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற திட்டமிடக் காரணம் தொகு

  • கண்டி எல்லைகளில் காவல்படைகளை அமைக்க வேண்டியிருந்தமை
  • கண்டி எல்லை - ஏற்றுமதி. இறக்குமதி வரிகள் பிரித்தானிய வர்த்தகத்திற்குப் பாதகமாக அமைந்திருந்தமை
  • திருகோணமலையையும், கண்டியையும் இணைத்துப் பாதையமைக்க எண்ணியிருந்தமை
  • கண்டிராச்சியம் சுதந்திரமாக இருப்பது, கரையோர இராச்சியங்களின் ஆட்சிக்கு இடையூறாக இருந்தமை
  • சில கண்டிப் பிரதானிகள் பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை.
  • கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவை எனும் பிரதானி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டமை.

தோல்வியில் முடிந்த முதல் கண்டிப்படையெடுப்புகள் தொகு

கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு 1803, 1809ம் ஆண்டுகளில் பிரித்தானிய படைகள் முயற்சிகளை மேற்கொண்டாலும்கூட அம்முயற்சி கைக்கூடவில்லை. காரணம்

  • கண்டிப் படைவீரர்களின் தளரா உறுதி மனப்பான்மைiயும், யுத்தத் தந்திரங்களும்
  • கண்டியின் இயற்கை அரண்கள்
  • பிரித்தானிய கூலிப்படைகள் இடையில் விட்டுச் சென்றமை
  • போக்குவரத்துப் பாதைகள் இன்மை
  • உணவுத்தட்டுப்பாடும், பருவமழையும்
  • பிரித்தானிய தளபதி டேவியின் அனுபவமற்ற போர்நிலை

1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றியமைக்கான காரணிகள் தொகு

சில தோல்விகளைச் சந்தித்த போதிலும்கூட, பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் முயற்சியை பிரித்தானியப் படைகள் கைவிட்டுவிடவில்லை. திட்டமிட்ட நடவடிக்கை அடிப்படையில் 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியதுடன், இலங்கையை முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

  • கண்டிப் பிரதானிகள் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை வெறுத்தமை, (உதாரணமாக: எகலப்பொலையின் மனைவி, குழந்தை என்போருக்கு அளிக்கப்பட்ட கொடூரமான தண்டனை)
  • பிரித்தானியப் பொறியியலாளர்களின் திட்டமிட்ட செயலும், திட்டமிட்ட படையெடுப்பும்
  • தளபதி பிரௌன்றிக்கின் இராஜதந்திரம் (உதாரணமாக: கண்டி மக்களைப் பாதுகாக்க நாம் கண்டியைக் கைப்பற்றுகின்றோம் என கண்டி மக்களை நம்பவைத்தல்)

கண்டி அரசு பிரித்தானியர் வசம் தொகு

மார்ச் 2 1815 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது.

உசாத்துணை தொகு

  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998

உசாத்துணை தொகு

  1. Wright, Arnold (1999). Twentieth century impressions of Ceylon: its history, people, commerce, industries, and resources (2 (illustrated) ). Asian Educational Services. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1335-5. http://books.google.lk/books?id=eUF_rS8FEoIC&dq=Twentieth+century+impressions+of+Ceylon:+its+history,+people,+commerce&source=gbs_navlinks_s. 
  2. ஆங்கிலேயரின் இலங்கை வருகை. இலங்கை கல்வித் திணைக்களம். 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டிப்_போர்கள்&oldid=3021658" இலிருந்து மீள்விக்கப்பட்டது