கண்டி ஒப்பந்தம்
(1815 கண்டி ஒப்பந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண்டி ஒப்பந்தம் (Kandyan Convention) என்பது மார்ச் 2 1815ம் ஆண்டு இலங்கை கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமானதும் கண்டி மன்னன் சார்பில் பிரதானிகளும், பிரித்தானியர் சார்பில் தளபதி பிரவுண்றிக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இது வரலாற்றில் முக்கியம் இடம் பெறுகின்றது.
கண்டி ஒப்பந்தத்தின் மூலப் பிரதி | |
வரைவு | 1815 |
---|---|
கையெழுத்திட்டது | 2–18 மார்ச் 1815 |
இடம் | தலதா மாளிகை, கண்டி, கண்டி இராச்சியம் |
நிலை | கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பதவி நீக்கம் |
கையெழுத்திட்டோர் | 12 |
தரப்புகள் | 2 |
மொழிகள் | சிங்களம், தமிழ், ஆங்கிலம் |
முக்கிய அம்சங்கள்
தொகு1815 கண்டி ஒப்பந்தத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான அம்சங்களாவன
- கண்டியரசன் தன்னுரிமையை இழந்துவிட்டான். கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமாயிற்று. இதுவரை கண்டியில் காணப்பட்ட பிரதானிகளின் அதிகாரங்களும் உரிமைகளும் தொடர்ந்தும் பேணப்படும்
- கண்டி இராச்சியத்தின் வெளிநாட்டு வர்த்தகம் பிரித்தானிய தேசாதிபதியின் கீழ் நேரடியாக நிர்வகிக்கப்படும்.
- இறைவரி, ஏனையவரிகளைப் பேணும் உரிமை பிரித்தானியருக்கே உண்டு
- கண்டி மக்கள் பின்பற்றிய பௌத்த மதமும், அதன் சட்டங்களும் வழிபாட்டு இடங்களும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் கண்டி தலதா மாளிகையின் தனித்துவம் பேணப்பட்டதுடன் பௌத்த மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.
உசாத்துணை
தொகு- மெண்டிஸ், ஜீ. சி. (1969). "நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், 3ம் பாகம்". கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2014.
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998
வெளி இணைப்புகள்
தொகு- கமாலிக்கா பீரிசு (25 மே 2014). "The Kandyan convention of 1815". தி ஐலண்டு. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]