சையத் சிப்தே ராசி

இந்திய அரசியல்வாதி

சையத் சிப்தே ராசி (பிறப்பு: 1939 ஆம் ஆண்டு மார்ச் 7) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அசாம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும், இந்தியாவின் துணை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 1939 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று ரே பரேலியில் சையத் விரசாத் உசைன் மற்றும் ரசியா பேகம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ஒவர் உசைனாபாத் மேல்நிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வியை கற்றார். பின்னர் ஷியா கல்லூரியில் பட்டப் பெற்றார். கல்லூரி காலத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இதே காலகட்டத்தில் இவர் கேஸ் கோஸி கார்னர் மற்றும் ஹோட்டல் கிருஷ்ணா ஆகிய இரண்டு உணவகங்களுக்கான கணக்குகளை பராமரிக்கும் வேலையில் இருந்தார். இவர் ஓர் உள்ளூர் தொழிலதிபர் பிரேம் நரேன் டாண்டனுக்காக பணிபுரிந்தார்.

இவர் தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை லக்னோ பல்கலைக்கழகத்தில் பெற்றார். அங்கு இவர் வணிகதுறை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமூக பங்களிப்பு

தொகு

இவர் லக்னோவில் 'அஞ்சுமான் அதாப்-இ-அத்பால்' என்ற சமூக-கலாச்சார அமைப்பை உருவாக்கினார். இந்த சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு குழந்தைகளுக்கு உள்ளூர் மற்றும் மாநிலத்திற்குள் உட்பட்ட இடத்திற்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்கிறது. மேலும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அதன் அலுவலகத்தில் ஒரு நூலகத்தை அமைத்துள்ளது. ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்து பரிசுகளை வழங்குகிறது. மேலும் சிறந்த குழந்தைக்கு ஆண்டுதோறும் 'அஞ்சுமான் ப்ளூ' என்ற பட்டத்தையும் வழங்கப்படுகிறது.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 1969 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச இளைஞர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1971 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசின் தலைவரானார். 1973 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து காங்கிரசை வழிநடத்தினார். 1980 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் உறுப்பினராகவும், 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை உ.பி. காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1988ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் இரண்டாவது முறையும், 1992 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு

"Remote Mindset - Open Magazine"

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_சிப்தே_ராசி&oldid=3040318" இலிருந்து மீள்விக்கப்பட்டது