இலாலன் பிரசாத் சிங்

இந்திய அரசியல்வாதி

இலாலன் பிரசாத் சிங் (Lallan Prasad Singh)(1912-17 அக்டோபர் 1998) என்பவர் அசாம் (1973-80), மணிப்பூர் (1973-80, 1982-83), மேகாலயா (1973-80), நாகாலாந்து (1973-81), மற்றும் திரிபுரா (1973–80) ஆகிய இந்திய மாநிலங்களின் ஆளுநராக இருந்தவர் ஆவார்.

பிறப்பும் இறப்பும்

தொகு

சிங் 1912-ல் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பக்ஸரில் பிறந்தார்.[1] 17 அக்டோபர் 1998 அன்று புது தில்லியில் இறந்தார்.

குடும்பம்

தொகு

இவர் மனோரமா சிங் (நீ மேத்தா) என்பவரை மணந்தார் மற்றும் வினிதா, நந்தினி, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய நான்கு குழந்தைகளைப் பெற்றார்.

அரசுப்பணி

தொகு

இம்பீரியல் குடிமைப் பணியில் 1936 தொகுதி உறுப்பினரான இவர் 9 செப்டம்பர் 1936 இல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார்.[2] 1947-ல் சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் இந்திய நிர்வாக சேவையில் நீண்ட குறிப்பிடத்தக்க அளவில் பணிபுரிந்தார். பீகாரின் முதல் சுதந்திர அரசாங்கத்தின் போது (1946-61) இவர் தலைமைச் செயலாளராக இருந்தார். முதல் பீகார் முதல்வர் எஸ். கே. சிங் மற்றும் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் அனுக்ரா நரேன் சின்ஹா ஆகிய இருவரின் நம்பிக்கையைப் பெற்றவராகச் செயல்பட்டார். இந்தியாவின் உள்துறை செயலாளர், ஐந்து வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர் மற்றும் நேபாளத்திற்கான இந்தியத் தூதர் உட்ப்பட பல முக்கிய நிர்வாகப் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

புத்தக வெளியீடு

தொகு

சிங் தனது அதிகாரத்துவ வாழ்க்கையைத் தவிர, இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவை 1) லால் பகதூர் சாஸ்திரியின் உருவப்படம்: மிகச்சிறந்த காந்தியவாதி மற்றும் 2) இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம்.

விருது

தொகு

இவருக்கு இந்திய அரசு, 1999-ல் இறப்பிற்கு பிறகு பத்ம விபூசண் விருது வழங்கியது.

படம்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு
  • 1975 இன் ஷில்லாங் ஒப்பந்தம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாலன்_பிரசாத்_சிங்&oldid=3869978" இலிருந்து மீள்விக்கப்பட்டது