சுன்சுனூ மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

சுன்சுனூ மாவட்டம் (Jhunjhunu district) (இந்தி:झुन्झुनू जिला) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சுன்சுனூ ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜெய்பூர் கோட்டத்தில் உள்ளது. இந்திய அளவில் இம்மாவட்டம் இந்திய இராணுவத்திற்கு அதிக வீரர்களை அனுப்பிய பெருமை உடையது. இம்மாவட்டத்தின் பிலானி நகரத்தில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், உலக அள்வில் பெயர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

சுன்சுனூ மாவட்டம்
झुन्झुनू जिला
சுன்சுனூமாவட்டத்தின் இடஅமைவு இராஜஸ்தான்
75°01′N 76°04′E / 75.02°N 76.06°E / 75.02; 76.06 - 27°23′N 28°19′E / 27.38°N 28.31°E / 27.38; 28.31
மாநிலம்இராஜஸ்தான், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜெய்பூர்
தலைமையகம்சுன்சுனூ
பரப்பு5,928 km2 (2,289 sq mi)
மக்கட்தொகை2,137,045 (2011)
மக்கள்தொகை அடர்த்தி361/km2 (930/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை22.89%
படிப்பறிவு74.13%
பாலின விகிதம்950
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்சுன்சுனூ[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7 [2]
முதன்மை நெடுஞ்சாலைகள்மாநில நெடுஞ்சாலை எண் 8
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இராஜஸ்தான் மாநிலத்தில் சுன்சுனூ மாவட்டம்; எண் 26

மாவட்ட அமைவிடம்

தொகு

செகாவாதி பிரதேசத்தில் அமைந்த சுன்சுனூ மாவட்டத்தின் கிழக்கிலும்; வடகிழக்கிலும் அரியானா மாநிலமும்; தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கில் சீகர் மாவட்டம், வடக்கிலும், வடமேற்கிலும் சூரூ மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

சுன்சுனூ மாவட்டம் சுன்சுனூ, சிராவா, புஹானா, கேத்திரி, நவால்காட், உதய்பூர்வாதி, மேல்சிசர், சூரஜ்காட் என வருவாய் வட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டம் சுன்சுனூ, மண்டவா, நவால்காட், கேத்திரி, பிலானி, உதய்பூர்வாதி, சூரஜ்காட் என ஏழு சட்டமன்றத் தொகுதிகளையும்; சுன்சுனூ மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,137,045 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.11% மக்களும்; நகரப்புறங்களில் 22.89% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 11.67% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,095,896 ஆண்களும்; 1,041,149 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 5,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 361 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 74.13% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 86.90% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.95% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 288,470 ஆக உள்ளது. [3]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,905,682 (89.17 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 228,178 (10.68 %) ஆகவும்; சமண சமய, சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

தொழில்கள்

தொகு

சுன்சுனூ மாவட்டத்தின் கேத்ரி வட்டத்தில் இந்தியாவின் பெரிய செம்பு சுரங்கங்கள் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

தொகு

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary Constituencies of Rajasthan" (PDF). http://164.100.9.199/home.html. 2012. Archived from the original (PDF) on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "Assembly Constituencies of Jhunjhunu district" (PDF). gisserver1.nic.in. 2012. Archived from the original (PDF) on 2013-06-03. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  3. Jhunjhunun (Jhunjhunu) District : Census 2011 data

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்சுனூ_மாவட்டம்&oldid=3618338" இலிருந்து மீள்விக்கப்பட்டது