சுன்சுனூ
சுன்சுனூ (Jhunjhunu), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கில் உள்ள சுன்சுனூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 180.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; புது தில்லிக்கு தென்மேற்கே 229.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
சுன்சுனூ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°08′N 75°24′E / 28.13°N 75.4°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | சுன்சுனூ |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சுன்சுனூ நகராட்சி |
ஏற்றம் | 323 m (1,060 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,18,473 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி |
• பேச்சு மொழிகள் | செகாவதி, மார்வாரி, அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 333001 |
தொலைபேசி குறியீட்டெண் | +91-1592 |
வாகனப் பதிவு | RJ-18 |
எழுத்தறிவு | 73.58% |
இணையதளம் | jhunjhunu |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சுன்சுனூ நகரத்தில் மக்கள் தொகை 1,18,473 ஆகும். அதில் ஆண்கள் 61,548 மற்றும் பெண்கள் 56,925 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,710 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.58% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 55.21 %, இசுலாமியர் 44.46 % மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்[1]
மும்பை-ஜெய்ப்பூர்- ஹிசார்-சிகார்-ரேவரி-தில்லி செல்லும் இருப்புப் பாதைகளுடன் சுன்சுனூ தொடருந்து நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு