வி. சண்முகநாதன்
வி. சண்முகநாதன் (பிறப்பு: 21 நவம்பர் 1949) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்.
வி. சண்முகநாதன் V Shanmuganathan | |
---|---|
மேகாலயா மாநில ஆளுநர் | |
பதவியில் 12 மே 2015 – 27 சனவரி 2017 | |
நியமித்தவர் | பிரணப் முகர்ஜி இந்தியக் குடியரசுத் தலைவர் |
முன்னவர் | கேசரிநாத் திரிப்பாதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 நவம்பர் 1949 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இருப்பிடம் | சில்லாங், மேகாலயா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
சமயம் | இந்து |
வாழ்க்கைக் குறிப்புதொகு
1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் மீனாட்சிசுந்தரத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் 1962 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்குப் பல பதவிகள் கொடுக்கப்பட்டன. தமிழில் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1]
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமது மரணம் அடைந்ததை அடுத்து இவர் 2015 அக்டோபர் 1 முதல் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் திகதி தனது ஆளுநர் பதவியிலிருந்து ராஜினமா செய்தார்.[4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Governor of Meghalaya". Government of Meghalaya. 5 ஜூலை 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஆளுநராக சண்முகநாதன் பொறுப்பேற்பு தி இந்து தமிழ் 01 அக்டோபர் 2015
- ↑ "V Shanmuganathan sworn in as Meghalaya governor". Business Standard. 20 மே 2015.
- ↑ "மேகாலய ஆளுநர் சண்முகநாதன் ராஜிநாமா". 18 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.