சங்கரூர் மாவட்டம்

சங்கரூர் மாவட்டம் (Sangrur district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சங்கரூர் சாகிப் ஆகும்.

சங்கரூர்
ਸੰਗਰੂਰ ਜ਼ਿਲ੍ਹਾ
संगरूर ज़िला
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்சங்கரூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்3
ஏற்றம்232
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1
 • அடர்த்தி460
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்148001
தொலைபேசி குறியீடு எண்01672
இணையதளம்sangrur.nic.in

பர்னாலா மாவட்டம் துவக்குவதற்கு முன்பு இம்மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாவட்டம் துரி, லெரகாகா, மெலர்கோட்லா, சங்கரூர், மற்றும் சுனாம் ஆகிய நகரங்களைக் கொண்டது.

மாவட்ட எல்லைகள்தொகு

சங்கரூர் மாவட்டத்தின் வடக்கில் லூதியானா மாவட்டம், வடகிழக்கில் பதேகாட் சாகிப் மாவட்டம், கிழக்கில் பட்டியாலா மாவட்டம், தென்கிழக்கில் ஜிந்து மாவட்டம், (அரியானா), தெற்கில் அரியானாவின் பதேகாபாத் மாவட்டம், தென்மேற்கில் மான்சா மாவட்டம், வடமேற்கில் பர்னாலா மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது.

மாவட்ட நிர்வாகம்தொகு

இம்மாவட்டம் தூரி, லெராகாகா, மெலர்கோட்லா, மூனாக், சங்கரூர் சாகிப் மற்றும் சுனாம் என ஆறு வட்டங்களையும்; மெலர்கோட்லா I, மெலர்கோட்லா II, செர்பூர், சங்கரூர், பவானிகாட், சுனாம், லெகரா, மூனாக், திர்ப்பா என பத்து ஊராட்சி ஒன்றியங்களையும்; பத்து நகராட்சி மன்றங்களையும்; 581 கிராமங்களையும் கொண்டது.

மக்கள் தொகையியல்தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,655,169 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 68.83% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 31.17% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.35% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 878,029 ஆண்களும் மற்றும் 777,140 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 885 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 3,625 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 457 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 67.99% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 73.18% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 62.17% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 181,334 ஆக உள்ளது. [1]

சமயம்தொகு

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,077,438 (65.10 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 389,410 (23.53 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 179,116 (10.82 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.

மொழிகள்தொகு

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரூர்_மாவட்டம்&oldid=2053914" இருந்து மீள்விக்கப்பட்டது