வெனேரா (Venera, ரஷ்ய மொழி: Венера) என்பது வெள்ளி கோளை ஆராய்வதற்காக 1961 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட விண்கலங்கள் ஆகும்.

சோவியத் வீனஸ் ஊர்திகளின் அமைவு

வெள்ளி கோள் ஆய்வுகள்

தொகு

வெனேரா என்றால் ருசிய மொழியில் வெள்ளி என்ற பொருள்படு‍ம். இது‍ வெள்ளி கோளை பற்றிய ஆய்வுத் திட்டமாகும். விண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966இல் வெள்ளியில் மோதியது. வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது. வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது. வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது. வெனேரா 15 ஜூன் 2, 1983 இல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக, இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெனேரா&oldid=3229208" இலிருந்து மீள்விக்கப்பட்டது