மரகதம் சந்திரசேகர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

மரகதம் சந்திரசேகர் (Maragatham Chandrasekar) (நவம்பர் 11 1917 - அக்டோபர் 27 2001)[1][2][3] இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய அரசியல்வாதி, மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சரும் ஆவார்.[4]

மரகதம் சந்திரசேகர்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
27 செப்டம்பர் 1982 – 26 செப்டம்பர் 1988
பதவியில்
3 ஏப்ரல் 1970 – 2 ஏப்ரல் 1982
தொகுதிபரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1951–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்-
பின்னவர்ஆர். கோவிந்தராஜூ நாயுடு
தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1917
இறப்பு26 அக்டோபர் 2001(2001-10-26) (அகவை 83)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஆர். சந்திரசேகர்
தொழில்அரசியல்வாதி

வாழ்க்கை தொகு

மரகதம் சந்திரசேகர் 11 நவம்பர் 1917-இல் வித்வான் களத்தூர் முனிசாமிக்கு மரகதம் முனிசாமியாகப் மகளாகப் பிறந்தார். இவர் இந்தியாவில் தனது இளநிலை அறிவியல் பட்டத்தினைப் பெற்றார். இலண்டனில் இதழியல், அறிவியல் மற்றும் உணவுமுறை படிப்புகளில் பட்டயப்படிப்பினை முடித்தார். இலண்டனில் சிறப்பு நிறுவ்னத்தில், நிர்வாக மேலான்மை என்ற பாடத்தையும் இவர் பயின்றார். மரகதம் ஆர். சந்திரசேகரை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகனும் (இலலித் சந்திரசேகர்) ஒரு மகளும், லதா பிரியகுமார் உள்ளனர். லதா பிரியக்குமார் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[5][6]

அரசியல் தொகு

மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து 1951ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை திருவள்ளூர் மக்களவை உறுப்பினராகவும், 1970 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1951 முதல் 1957 வரை சுகாதாரம், 1962 முதல் 1964 வரை உள்துறை மற்றும் 1964 முதல் 1967 வரை சமூக நலத்துறை துணை அமைச்சராகவும் பணியாற்றினார். 1972ல், அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராக மரகதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7][8][9][10]

ராஜீவ் காந்தியின் படுகொலை தொகு

திருபெரும்புதூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மரகதம், இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்திரசேகர் நடைபெற்ற பேரணியில் மரகதம் சந்திரசேகருடன் கலந்துகொண்டார்.[11]

இறப்பு தொகு

மரகதம் சந்திரசேகர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் 26 அக்டோபர் 2001 அன்று இறந்தார்.[12]

மேற்கோள்கள் தொகு

 1. "Maragatham Chandrasekar dead". THE TIMES OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. "Maragatham dead". The Hindu. Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. "மரகதம் சந்திரசேகரின் உடல் தகனம்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 4. "OBITUARY REFERENCES". THE LOK SABHA SECRETARIAT. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 5. "மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்.எல்.ஏ. லதா பிரியகுமார் மரணம்". மாலைமலர். Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 6. "மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்எல்ஏ லதா பிரியகுமார் மரணம்". தினகரன். Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 7. "Members Bioprofile". Tenth Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 8. "Lok Sabha Experience wise List". National Informatics Centre. Archived from the original on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 9. "Members Biographical Sketches". National Informatics Centre. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". National Informatics Centre. Archived from the original on 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 11. https://www.business-standard.com/article/news-ians/an-unbelievable-account-of-rajiv-gandhi-s-killing-book-review-114092600109_1.html
 12. https://tamil.oneindia.com/news/2001/10/28/maragatham.html

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதம்_சந்திரசேகர்&oldid=3917951" இலிருந்து மீள்விக்கப்பட்டது