எட்வின் ஹபிள்
எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட எட்வின் ஹபிள் (Edwin Hubble, நவம்பர் 20, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற வானியலாளர் ஆவார். இவரது தந்தையார் மிசோரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு காப்புறுதித் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார்.
எட்வின் ஹபிள் | |
---|---|
பிறப்பு | எட்வின் பாவெல் ஹபிள் நவம்பர் 20, 1889 மார்சுபீல்டு, மிசோரி, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 28, 1953 சான் மரீனோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 63)
வாழிடம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் மவுன்ட் வில்சன் பார்வையரங்கம் |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஹபிள் தொடர் |
பின்பற்றுவோர் | ஆலன் சான்டேஜ் |
விருதுகள் | நியூகோம்ப் பரிசு 1924 புரூஸ் பதக்கம் 1938 பிராங்கிளின் பதக்கம் 1939 ராயல் வானியல் குழுவின் தங்க பதக்கம் 1940 லீஜியன் ஆஃப் மெரிட் 1946 |
கையொப்பம் |
இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், கணிதம், வானியல் என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் நியூ அல்பனியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், கூடைப்பந்துப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் கெண்ட்டகியில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் இராணுவ சேவையில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இவர் எழுதிய ஹபிள் விதி அண்டம் விரிந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகிறது.[1]
நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது.[2][3][4][5]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hubble, Edwin (1929). "A relation between distance and radial velocity among extra-galactic nebulae". PNAS 15 (3): 168–173. doi:10.1073/pnas.15.3.168. பப்மெட்:16577160. பப்மெட் சென்ட்ரல்:522427. Bibcode: 1929PNAS...15..168H. http://www.pnas.org/cgi/reprint/15/3/168. பார்த்த நாள்: 2017-03-22.
- ↑ ஹபிள் விண் தொலைநோக்கி இயங்கி 25 ஆண்டுகள் – படத்தொகுப்பு
- ↑ Hubble, Edwin (December 1926). "Extragalactic nebulae". Astrophysical Journal 64 (64): 321–369. doi:10.1086/143018. Bibcode: 1926ApJ....64..321H. http://adsabs.harvard.edu/abs/1926ApJ....64..321H.
- ↑ Slipher, V.M. (1917). Proc. Am. Philos. Soc.. 56. பக். 404–409.
- ↑ Segal, I.E. (December 1993). Proc. Natl. Acad. Sci. USA. 90. பக். 11114–11116.
வெளியிணைப்புகள்
தொகு- டைம் தளம் பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம்
- லூயிவில் பல்கலைக்கழகம் வானியல் துறை — எட்வின் ஹபிள் புகைப்படங்கள்
- எட்வின் ஹபிள் வாழ்க்கை வரலாறு — ஆலன் சான்டேஜ் எழுதியது
- O'Connor, John J.; Robertson, Edmund F., "எட்வின் ஹபிள்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- அமெரிக்கன் பிசிக்கள் குழுவின் எட்வின் ஹபிள் வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்
- எட்வின் பாவெல் — பிரபஞ்சப்பெருவெளியைக் கண்டுபிடித்தவர் பரணிடப்பட்டது 2009-05-31 at the வந்தவழி இயந்திரம்
- விரியும் அண்டம், 1942 எட்வின் ஹபிள்