ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு

ஜெரார்டு என்றி தெ வவுகவுலியூர்சு (Gérard Henri de Vaucouleurs) (25 ஏப்பிரல் 1918- 7 அக்தோபர் 1995) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.

ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு
Gérard de Vaucouleurs
பிறப்புஜெரார்டு என்றி தெ வவுகவுலியூர்சு
1918|4|25|df=yes
பாரிசு
இறப்பு1995|10|7|1918|4|25|df=yes
அவுசுடின், டெக்சாசு
தேசியம் 
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்சோர்பான்னே
விருதுகள்என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை 1988

வாழ்வும் பணியும்தொகு

பாரீசில் பிரந்த இவர் தொடக்கத்தில் இருந்தே பயில்நிலை வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இலவல் பட்டத்தை 1939 இல் நகரில் இருந்த சோபான் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இரண்டாம் உலகப் போரின் படைத்துரைப் பணிக்குப் பின்னர், வானியல் ஆய்வில் மீள முனைவாக ஈடுபடலானார்.

ஆற்றொழுக்காக ஆங்கிலம் பேசவல்ல இவர், 19419 முதல் 1951 வரை இங்கிலாந்திலும் 1951 முதல் 1957 வரை ஆத்திரேலியாவிலும் அங்கு 1957-56 இல் மவுண்ட் சுட்ரோம்லோ வான்காணகத்திலும் அரிசோனா உலோவல் வான்கானகத்திலும் 1958-60 இல் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்திலும் இருந்துள்லார். இவர் 1960 இல் அவுசுடினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் அமர்த்தப்பட்டார். அங்கே இவர் தன் வாழ்நால் முழுவதும் பணிபுரிந்துள்ளார். இவர் அவுசுயினில் இருந்த தன் வீட்டில் மாரடைப்பால் தன் 77 ஆம் அகவையில் இறந்தார்.[1]

இவர் பால்வெளிகளின் ஆய்வில் சிறப்புத் தகையாளராக விளங்கினார். இவர் e பொலிவான பால்வெளிகளின் மூன்றாம் பார்வை அட்டவணை யை தன் மனைவி அந்தோனியெட்டி யுடன் இணைந்து உருவாக்கினார் (1921-1987). அந்தோனியெட்டி அவுசுடினில் இவரது ஒருசாலை வானியலாளர். இவருடன் வாழ்நாள் முழுவதும் இவருடன் இணைந்து பணிபுரிந்தவர்.[2] இவர் அப்புள், சாந்தகே ஆகியோரின் பால்வெளி அட்டவணைகளை மீள்பார்வையிடுதலைச் சிறப்புப் பனியாக எடுத்துகொண்டார். அவற்ருக்கன தொலைவுகளையும் வேறுவகை அளபுருக்களைக் கொண்டு அளந்தார் . இதற்கு ஒளிர்மை, வலயப் பால்வெளி விட்டங்கள், உயர்பொலிவு வலயப் பால்வெளிக் கொத்துகள் ஆகிய பதின்வெளிகளைக் கனக்கில் கொண்டு "இடர்களை பரவலாக்கிடும் முரையைப் பயன்படுத்தினார். இவர் 1950 களில் பால்வெஈக்கொத்துகள் இணைந்து மீப்பால்வெளி கொத்து உருவாதலைப் பற்றிப் பரப்புரை செய்தார் .[1]

தெ வவுகவுலியூர்சு திருத்திய அப்புள் வரிசைமுறை , செந்தர அப்புள் வரிசைமுறைக்கு இணையாகப் பால்வெளிகளை வகைபடுத்த, பயன்படும் மற்றொரு முறையாகும்.

அமெரிக்க வானியல் கழகம் 1988 இல் என்றி நோரிசு இரசல் விரிவுரைத்தகைமையை அளித்தது. அதே ஆண்டில் மேலும் இவருக்கு பிரெஞ்சு வானியல் கழகம் பிரிக்சு ஜூல்சு ஜான்சன் விருதும் வழங்கியது.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Thomas Jr., Robert McG. (October 11, 1995), "Gerard de Vaucouleurs, 77, Galactic Astronomer, Is Dead", The New York Times, 2012-02-21 அன்று பார்க்கப்பட்டது
  2. Memoriam to Antoinette de Vaucouleurs from University of Texas Austin

வெளி இணைப்புகள்தொகு