2011 சிக்கிம் நிலநடுக்கம்
2011 சிக்கிம் நிலநடுக்கம் ஞாயிறு, செப்டம்பர் 18 2011 அன்று உள்ளூர் நேரம் மாலை 18.10க்கு (12:40 UTC) சிக்கிம்-நேபாள எல்லை அருகில் கஞ்சன்சங்கா மலைப் பகுதியை மையமாகக் கொண்டு உந்தத்திறன் ஒப்பளவு 6.9 அளவிலான சேதம் விளைவித்த நிலநடுக்கமாகும்.[3] இந்த நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா முழுமையும், நேபாளம், பூடான், வங்காளதேசம் மற்றும் தெற்கு திபெத்தில் உணரப்பட்டது. அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் உணரப்பட்ட 4.2 அளவிலான நிலநடுக்கத்திற்கு சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.[4] தவிர, 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த நான்காவது நிலநடுக்கமாகும்.[5]
நாள் | 18 செப்தெம்பர் 2011 |
---|---|
தொடக்க நேரம் | 18:10 இந்திய சீர் நேரம் |
நிலநடுக்க அளவு | 6.9 Mw |
ஆழம் | 19.7 கிமீ (12.1 மைல்கள்) |
நிலநடுக்க மையம் | 27°43′23″N 88°03′50″E / 27.723°N 88.064°E |
வகை | தட்டுப் புவிப்பொறை உள்ளிடை[1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | இந்தியா வங்காளதேசம் நேபாளம் பூட்டான் சீனா |
அதிகபட்ச செறிவு | மெர்கலி செறிவு ஒப்பளவு VII[2] |
ஆழிப்பேரலை | இல்லை |
நிலச்சரிவுகள் | ஆம் |
பின்னதிர்வுகள் | ஆம் |
உயிரிழப்புகள் | குறைந்தது 18 பேர் மரணம் |
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 18 பேராவது கொல்லப்பட்டனர்[6]. சிக்கிமில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.[7][8] காங்டாக்கில் பல கட்டிடங்கள் இடிந்தன.[9] நேபாளத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; இவர்களில் காட்மாண்டூவில் பிரித்தானிய தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததில் இறந்த மூவரும் அடக்கம்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Magnitude 6.9 - Sikkim, India: Tectonic Summary". USGS. 2011-09-18. Archived from the original on 2011-09-21. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
- ↑ "Pager - M 6.9 - Sikkim, India". USGS. 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
- ↑ "Magnitude 6.8 - SIKKIM, INDIA". United States Geological Survey (USGS) இம் மூலத்தில் இருந்து 21 செப்தெம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110921163147/http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/Quakes/usc0005wg6.php. பார்த்த நாள்: 18 September 2011.
- ↑ "Very strong earthquake in SIKKIM, India". 18 September 2011. Earthquake-report.com. Archived from the original on 20 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
- ↑ "Sikkim quake is India's fourth this september". NDTV. 18 September 2011 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121009111455/http://www.ndtv.com/article/india/sikkim-quake-is-indias-fourth-this-september-134548?pfrom=home-bigstory. பார்த்த நாள்: 18 September 2011.
- ↑ Strong Quake Kills 18 in India, Nepal, Voice of America, 18 September 2011
- ↑ 9 killed in Sikkim quake, damage reported பரணிடப்பட்டது 2011-09-19 at the வந்தவழி இயந்திரம், IBN Live, Setpember 18, 2011
- ↑ Earthquake claims two lives in Sikkim, தி இந்து, September 18, 2011
- ↑ "Magnitude 6.8 quake in India, several dead". Reuters. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-09-19.
- ↑ Earthquake kills 5 in Nepal, Daily News and Analysis, September 18, 2011