பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை)

திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XVI; 18 செப்டம்பர் 1765 – 1 ஜூன் 1846, இயற்பெயர்: பர்த்தலமேயோ அல்பேர்த்தோ கப்பெல்லாரி) என்பவர் காமல்டோலேஸ் என்னும் புனித ஆசிர்வாதப்பர் சபைத் துறவியும் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 பெப்ரவரி 1831 முதல் 1846இல் தனது இறப்பு வரையும் இருந்தவர் ஆவார்.[1] இவர் துறவற சபையில் இணைந்த போது மௌரோ என்னும் பெயரைத் தனது துறவுப்பெயராக ஏற்றார். இவர் மிகவும் அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தார். திருத்தந்தை நாடுகளிலும் ஐரோப்பாவிலும் பரவிய மக்களாட்சியினை இடதுசாரி புரட்சியின் முன்னோட்டமாக இவர் பார்த்ததால் அதனை இவர் எதிர்த்தார்.

திருத்தந்தை
பதினாறாம் கிரகோரி
தேர்வு2 பெப்ரவரி 1831
ஆட்சி துவக்கம்6 பெப்ரவரி 1831
ஆட்சி முடிவு1 ஜூன் 1846
முன்னிருந்தவர்எட்டாம் பயஸ்
பின்வந்தவர்ஒன்பதாம் பயஸ்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1787
ஆயர்நிலை திருப்பொழிவு6 பெப்ரவரி 1831
பர்த்தலமேயோ பாக்கா-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது13 மார்ச் 1826
பன்னிரண்டாம் லியோ-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்பர்த்தலமேயோ அல்பேர்த்தோ கப்பெல்லாரி
பிறப்பு(1765-09-18)18 செப்டம்பர் 1765
Belluno, வெனிஸ் குடியரசு
இறப்பு1 சூன் 1846(1846-06-01) (அகவை 80)
உரோம், திருத்தந்தை நாடுகள்
வகித்த பதவிகள்
  • காமல்டோலேஸ் சபையின் பொதுப் பதில்குரு (1814-1826)
  • விசுவாசப்பரப்புதல் பேராயத்தின் தலைவர் (1826-1831)
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

கிரகோரி என்னும் பெயர் ஏற்ற கடைசித் திருத்தந்தையும் ஆயரல்லாத ஒருவர் திருத்தந்தையாகத் தேர்வான கடைசித் திருத்தந்தையும் இவர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. John-Peter Pham, Heirs of the Fisherman, (Oxford University Press, 2004), 187.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
கியுலோ மரிய தெல்லா சோமாக்லியா
விசுவாசப்பரப்புதல் பேராயத்தின் தலைவர்
1 அக்டோபர் 1826 – 2 பெப்ரவரி 1831
பின்னர்
கார்லோ மரிய பெடிசினி
முன்னர் திருத்தந்தை
2 பெப்ரவரி 1831 – 1 ஜூன் 1846
பின்னர்