இதித் ஸ்டைன்
புனித இதித் ஸ்டைன் (Saint Edith Stein, அக்டோபர் 12, 1891 – ஆகத்து 9, 1942) ஒரு ஜேர்மானிய - யூத மெய்யியலாளர் ஆவார். இவர் தன் குடும்பத்தின் ஏழாவது கடைசி குழந்தை. இவர் தனது 13-ஆம் அகவையில் யூத மதத்தின் மேது நம்பிக்கை இழந்தார். தன் நண்பர்களின் உறுதியான கத்தோலிக்க நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, சுய ஆர்வமோடு மறைகல்வி பயின்று 1-ஜனவரி-1922 அன்று திருமுழுக்கு பெற்றார். 1934-ஆம் ஆண்டு சிலுவையின் தெரெசா பெனடிக்டா- என்ற பெயரோடு, கார்மேல் சபையில் சேர்ந்தார்.
புனித சிலுவையின் தெரெசா பெனடிக்டா | |
---|---|
கன்னியர், இரத்த சாட்சி | |
பிறப்பு | வார்க்லோ, ஜெர்மன் பேரரசு | அக்டோபர் 12, 1891
இறப்பு | ஆகத்து 9, 1942 ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து | (அகவை 50)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | மே 1, 1987, கோலோன், செருமனி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 11, 1998 by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
திருவிழா | 9 ஆகஸ்ட் |
சித்தரிக்கப்படும் வகை | புத்தகம், அக்கினிக் கொழுந்து, மஞ்சள் நிற தாவீதின் விண்மீன் |
பாதுகாவல் | ஐரோப்பா, அனாதைகள், உலக இளைஞர் தினம்[1] |
பின்பு அவர், ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1938-ஆம் ஆண்டு நாசி கலகத்தினால் நெதர்லாந்துக்கு தப்பி ஓடினார். இருப்பினும் 1942-ஆம் ஆண்டு இவரும், இவரின் சகோதரி ரோசும், கைது செய்யப்பட்டு, ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் அடைக்கப்பட்டார்கள். அங்கே வாயு அறையில் அடைக்கப்பட்டு இவர் இறந்தார்.
வரலாறு
தொகு1891ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் அப்போதைய ஜெர்மனியின் பிரேசல்யு நகரத்தில் யூதப் பெற்றோருக்கு 11வது குழந்தையாகப் பிறந்தார் இதித் ஸ்டைன். இந்நகரம் தற்போது போலந்து நாட்டில் விராத்ஸ்சாஃப் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதித் யூதர்களின் முக்கிய விழாவான பாவக்கழுவாய் விழாவின் போது இவர் பிறந்தார். இவருக்கு 2 வயது நடந்த போது இவரின் தந்தை இறந்தார். இதித் மெய்யியல் படிப்பில் சிறந்து விளங்கினார். உண்மையைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 14வது வயதில் கடவுளை நம்புவதைக் கைவிட்டார். தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்தார். இதித் எட்மண்ட் ஹஸ்ரல் என்பவரின் மெய்யியல் அறிவால் ஈர்க்கப்பட்டிருந்த காலத்தில் ஒரு சிறந்த கத்தோலிக்கப் பேராசிரியரின் விதவை மனைவிக்கு உதவிகள் செய்து வந்தார். இந்த விதவை, தனது அத்தனை துன்பங்களிலும் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நம்பி அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தது இதித்தின் வாழ்வை மாற்றியது. அத்துடன், ஒருசமயம் தனது நண்பரின் இல்லம் சென்றிருந்த சமயத்தில் புனித அவிலா தெரேசாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. அதையும் எடுத்து வாசித்தார் இதித். இது அவரது அகக் கண்களை திறந்தது. இதன் விளைவாக திருமறை விளக்க நூல் ஒன்றையும் திருப்பலி புத்தகம் ஒன்றையும் வாங்கி வாசித்தார். கத்தோலிக்க நம்பிக்கையினைத் தழுவினார். அருட்பணியாளரின் வேண்டுகோளின் பேரில் ஆசிரியராகவும் பணி செய்தார். அச்சமயத்தில் ஜெர்மனியில் யூதர்களை சித்ரவதைப்படுத்துவது தலைதூக்கியது.
எடித் கற்றுக் கொடுக்கக் கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனால் இவர் 1933ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கொலோன் நகர் கார்மேல் சபையில் சேர்ந்தார். திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்ட் என்ற புதிய பெயரையும் ஏற்றார். திருச்சிலுவையினால் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசா என்பது இதன் பொருள். ஹிட்லரின் அட்டூழியங்கள் மீண்டும் 1937ம் ஆண்டில் துவங்கியது. ஜெர்மனியில் யூதர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததையும் அவர்களது வளமான வாழ்வையும் ஹிட்லரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் அடையாளமாக முதலில் கொலோன் யூதமதத் தொழுகைக்கூடத்தைத் சீக்கிரையாக்கினான் ஹிட்லர். ஹிட்லரின் இந்தக் கொடுமைகள் கண்டு கொதித்தெழுந்த அருள்சகோதரி தெரேசா, ஹிட்லருக்கு யாரும் ஓட்டுப்போடக் கூடாது. அவன் கடவுளின் மாபெரும் எதிரி. கடவுளின் கோபத்தைக் கொணர்ந்து ஜெர்மனியைத் தரைமட்டமாக்குவான் என்று குரல் எழுப்பி வந்தார். எனவே இச்சகோதரியின் பாதுகாப்புக்காக இவரையும், கத்தோலிக்கத்துக்கு மாறியிருந்த எடித்தின் இன்னொரு சகோதரி ரோசாவையும் ஹாலந்தின் இருந்த கார்மேல் மடத்துக்கு அனுப்பி வைத்தனர். எனினும், ஹிட்லரின் நாசிப் படைகள் 1940ம் ஆண்டில் ஹாலந்தை ஆக்கிரமித்தன. தெரேசா, ரோசா மற்றும் பல யூதர்கள் கைது செய்யப்பட்டு ஆஷ்விஷ் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அம்முகாமில் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று நச்சுவாயு அறைகளில் இவர் இறந்தார்.
இவர் எழுதியவை, “கடவுளின் கரங்களில் வாழக் கற்றுக் கொள்ளுதல்” என்ற தலைப்பில் 17 தொகுப்புகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவரது விழா நாள் ஆகஸ்ட் 9. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை ஐரோப்பாவின் ஆறு பாதுகாவலர்களுல் ஒருவராகவும் அறிவித்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Patron Saints Index: Saint Teresia Benedicta of the Cross" Accessed 26 January 2007.