முதன்மை பட்டியைத் திறக்கவும்

க. ப. அறவாணன்

தமிழர் ஆய்வாளர்

க. ப. அறவாணன் (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (திருநெல்வேலி மாவட்டம்)[1] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.

க. ப. அறவாணன்
க. ப. அறவாணன்.jpg
பிறப்புஅருணாசலம்
ஆகத்து 9, 1941(1941-08-09)
திருநெல்வேலி மாவட்டம்
இறப்புதிசம்பர் 23, 2018(2018-12-23) (அகவை 77)
சென்னை
தேசியம்இந்தியா
கல்விஎம்.ஏ., எம்.லிட்., பி.எச்டி.
பணிதமிழ்ப்பேராசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
தாயம்மாள் அறவாணன்
பிள்ளைகள்அருள்செங்கோர்,

கல்விதொகு

சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். "நன்னூலும் அதன் உரைகளும்" என்னும் ஆய்வுக்கட்டுரைக்காக எம்.லிட். பட்டம் பெற்றவர்.

பணிதொகு

 • தமிழ் விரிவுரையாளர், தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.
 • முதல்வர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
 • தமிழ்த் துணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
 • ஆய்வுப்பேராசிரியர், செனகல் பல்கலைக்கழகம், செனகல்.
 • தமிழ்ப்பேராசிரியர் & துறைத்தலைவர், லயோலா கல்லூரி, சென்னை.
 • தமிழ்ப்பேராசிரியர் & தமிழியற்புலத்தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், காலாப்பட்டு, புதுச்சேரி.
 • துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி.

எழுதிய நூல்கள்தொகு

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;

 • புரட்சிப்பொறிகள் (கவிதை)
 • அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
 • அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
 • சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை[2]
 • தொல்காப்பியக் களஞ்சியம்
 • கவிதை கிழக்கும் மேற்கும்
 • அற்றையநாள் காதலும் வீரமும்
 • தமிழரின் தாயகம்
 • தமிழ்ச் சமுதாய வரலாறு
 • தமிழ் மக்கள் வரலாறு[3]
 • Collected Papers on Tamilogy

இதழ் ஆசிரியர்தொகு

இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்

 • அறிவியல் தமிழியம்
 • தேடல்
 • முடியும்
 • கொங்கு

பதிப்பாசிரியர்தொகு

இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.

அறவாணர் விருதுதொகு

இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

விருதுகளும் கௌரவங்களும்தொகு

 • தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
 • 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது

உசாத்துணைதொகு

 • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்தொகு

 1. "முனைவர் க ப அறவாணன்-நேர்காணல்". archive.is (2 February 2014). மூல முகவரியிலிருந்து 2 February 2014 அன்று பரணிடப்பட்டது.
 2. http://www.idref.fr/060975016
 3. "தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம்". தமிழ்க் கோட்டம், 2013 Ceṉṉai : Tamil̲k Kōṭṭam (23 December 2018).
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ப._அறவாணன்&oldid=2733600" இருந்து மீள்விக்கப்பட்டது