எஸ். ஏ. ரகீம்

செய்யது அப்துல் ரகீம் (Seyadu Abdul Raheem, 9 ஆகத்து 1921 - 1989) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

எஸ். ஏ. ரகீம்
S. A. Raheem

நாஉ
மன்னார் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1974–1977
முன்னவர் வி. ஏ. அழகக்கோன்
பின்வந்தவர் பி. எஸ். சூசைதாசன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 9, 1921(1921-08-09)
இறப்பு 1989
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் புனித சேவியர் ஆண்கள் கல்லூரி, மன்னார்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி

ஆரம்ப வாழ்க்கை தொகு

ரகீம் 1921 ஆகத்து 9 இல் பிறந்தார்.[1][2] ஆரம்பக் கல்வியை மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார்.[1][2]

அரசியலில் தொகு

ரகீம் 1960 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். 1962 முதல் 1972 வரை மன்னார் நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்.[1] 1970 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மன்னார் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வி. ஏ. அழகக்கோனிடம் 69 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[3] அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் இறந்ததை அடுத்து 1974 பெப்ரவரி 25 இடம்பெற்ற இடைத்தேர்தலில் 75 அதிகப்படியான வாக்குகளால் தமிழரசுக் கட்சி வேட்பாளர் செபமாலை ஜோன் மார்க் என்பவரை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1977 இல் நடந்த தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.

அரசியலின் பின்னர் தொகு

அரசியலில் இருந்து ஓய்வெடுத்த பின்னர் ரகீம் 1978 ஆம் ஆண்டில் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.[1] அனைத்திலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் பிரதித் தலைவராகவும், நெற்சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் பிரதித் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[1][2] 1989 ஆம் ஆண்டில் காலமானார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._ரகீம்&oldid=3546315" இருந்து மீள்விக்கப்பட்டது