மன்னார் தேர்தல் தொகுதி

மன்னார் தேர்தல் தொகுதி (Mannar Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் மன்னார், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1947 தேர்தல்கள்

தொகு

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சி. சிற்றம்பலம் சுயேட்சை சாவி 5,877 59.97%
  ஜெகநாதன் தியாகராஜா ஐக்கிய தேசியக் கட்சி குடை 3,381 34.50%
எஸ். விராசுப்பிள்ளை சுயேட்சை கை 542 5.53%
தகுதியான வாக்குகள் 9,800 100.00%
நிராகரிக்கப்பட்டவை 71
மொத்த வாக்குகள் 9,871
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 14,587
வீதம் 67.67%

1952 தேர்தல்கள்

தொகு

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சி. சிற்றம்பலம் சுயேட்சை சாவி 5,876 52.62%
வி. ஏ. அழகக்கோன் சுயேட்சை நட்சத்திரம் 5,290 47.38%
தகுதியான வாக்குகள் 11,166 100.00%
நிராகரிக்கப்பட்டவை 113
மொத்த வாக்குகள் 11,279
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 14,959
வீதம் 75.40%

1956 தேர்தல்கள்

தொகு

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. அழகக்கோன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 6,726 53.12%
சேர் கே. வைத்தியநாதன் குடை 4,857 38.36%
சி. சிற்றம்பலம் சுயேட்சை ஈருருளி 1,078 8.51%
தகுதியான வாக்குகள் 12,661 100.00%
நிராகரிக்கப்பட்டவை 105
மொத்த வாக்குகள் 12,766
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 15,819
வீதம் 80.70%

1960 (மார்ச்) தேர்தல்கள்

தொகு

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. அழகக்கோன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 6,463 47.37%
எஸ். எச். முகம்மது சுயேட்சை Pot 4,587 33.62%
செபமாலை ஜோன் மார்க் சேவல் 2,155 15.79%
என். எம். அப்துல் கபூர் கண்ணாடி 440 3.22%
தகுதியான வாக்குகள் 13,645 100.00%
நிராகரிக்கப்பட்டவை 126
மொத்த வாக்குகள் 13,771
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 16,936
வீதம் 81.31%

1960 (சூலை) தேர்தல்கள்

தொகு

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. அழகக்கோன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 7,307 55.79%
  எஸ். எச். முகம்மது ஐக்கிய தேசியக் கட்சி யானை 5,790 44.21%
தகுதியான வாக்குகள் 13,097 100.00%
நிராகரிக்கப்பட்டவை 72
மொத்த வாக்குகள் 13,169
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 16,936
வீதம் 77.76%

1965 தேர்தல்கள்

தொகு

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. அழகக்கோன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 6,896 39.52%
எம். எஸ். அப்துல் ரகீம் சுயேட்சை குடை 6,040 34.61%
செபமாலை ஜோன் மார்க் கண்ணாடி 4,514 25.87%
தகுதியான வாக்குகள் 17,450 100.00%
நிராகரிக்கப்பட்டவை 121
மொத்த வாக்குகள் 17,571
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 21,418
வீதம் 82.04%

1970 தேர்தல்கள்

தொகு

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. ஏ. அழகக்கோன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 10,697 48.98%
  எஸ். ஏ. ரகீம் ஐக்கிய தேசியக் கட்சி யானை 10,628 48.67%
  என். எம். அப்துல் காதர் இலங்கை சுதந்திரக் கட்சி கை 513 2.35%
தகுதியான வாக்குகள் 21,838 100.00%
நிராகரிக்கப்பட்டவை 127
மொத்த வாக்குகள் 21,965
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,441
வீதம் 86.34%

வி. அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார்.

1974 இடைத்தேர்தல்

தொகு

வி. ஏ. அழகக்கோன் காலமானதை அடுத்து மன்னார் தேர்தல் தொகுதிக்கு 1974, பெப்ரவரி 25 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வருமாறு[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எஸ். ஏ. ரகீம் ஐக்கிய தேசியக் கட்சி யானை 12,974 49.05%
  செபமாலை ஜோன் மார்க் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 12,899 48.77%
எஸ். ஏ. காதர் சுயேட்சை சூரியன் 469 1.77%
எஸ். பேர்சி இம்மானுவேல் விளக்கு 108 0.41%
தகுதியான வாக்குகள் 26,450 100%
நிராகரிக்கப்பட்டவை 130
மொத்த வாக்குகள் 26,580
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,596
வாக்கு வீதம் 89.81%

1977 தேர்தல்கள்

தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  பி. எஸ். சூசைதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 15,141 51.58%
எம். எஸ். அப்துல் ரகீம் ஐக்கிய தேசியக் கட்சி யானை 12,929 44.05%
செபமாலை ஜோன் மார்க் சுயேட்சை விளக்கு 663 2.26%
எச். எஸ். தாவூது கை 478 1.63%
எம். கந்தசாமி தராசு 141 0.48%
தகுதியான வாக்குகள் 29,352 100.00%
நிராகரிக்கப்பட்டவை 84
மொத்த வாக்குகள் 29,436
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,767
வீதம் 92.66%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் பி. எஸ். சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[12].

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 இலங்கைத் தமிழரசுக் கட்சி சமட்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  6. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  7. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  10. "Result of Parliamentary ByElections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  11. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  12. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_தேர்தல்_தொகுதி&oldid=3566916" இலிருந்து மீள்விக்கப்பட்டது