முதன்மை பட்டியைத் திறக்கவும்

பி. எஸ். சூசைதாசன்

பிலேசியன் சூசை சூசைதாசன் (Pilesiyan Sosai Soosaithasan, 24 சூலை 1934[1] – 13 அக்டோபர் 2017)[2] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பி. எஸ். சூசைதாசன்
P. S. Soosaithasan

நாஉ
மன்னார் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1983
முன்னவர் எஸ். ஏ. ரகீம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 24, 1934(1934-07-24)
இறப்பு 13 அக்டோபர் 2017(2017-10-13) (அகவை 83)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில் கணக்காளர்
இனம் இலங்கைத் தமிழர்

அரசியலில்தொகு

சூசைதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியின் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.[3] இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[4].

சூசைதாசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் 2010 தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் இவர் கூட்டமைப்புப் பட்டியலில் ஆறாவதாக வந்ததனால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "Soosaithasan, Pilesiyan Sosai". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Former TULF Mannar MP Soosaithasan Passes Away at the Age of 83 in Sri Lanka" (14 October 2017). பார்த்த நாள் 14 October 2017.
  3. "Result of Parliamentary General Election 1977". இலங்கை தேர்தல் திணைக்களம்.
  4. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு. http://www.island.lk/2008/01/18/features11.html. 
  5. "Parliamentary General Election - 2010 Vanni Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._சூசைதாசன்&oldid=2699075" இருந்து மீள்விக்கப்பட்டது