அஸிம்-உத்-தவுலா
அசிம்-உத்-தவுலா (Azim-ud-Daula, 1775 - 2 ஆகத்து 1819) என்பவர் 1801 முதல் 1819 வரை ஆற்காடு நவாபாக இருந்தவர். இவர் அமிர் உல் -அமாராவின் மூத்த மகனும், உம்தத் உல்-உமாரின் மருமகனும் ஆவார்.
அசிம்-உத்-தவுலா | |||||
---|---|---|---|---|---|
ஆற்காடு நவாப் | |||||
அஸிம்-உத்-தவுலா | |||||
ஆட்சி | 31 சூலை 1801 | ||||
முன்னிருந்தவர் | உம்தத் உல்-உமாரா | ||||
பின்வந்தவர் | அசாம் ஜா | ||||
வாரிசு(கள்) | ஏழு ஆண்கள் | ||||
| |||||
அரச குலம் | வல்லாசா | ||||
தந்தை | அமீர் உல்-உமாரா | ||||
தாய் | அசிமுன்னிசா பேகம் | ||||
பிறப்பு | 1775 | ||||
இறப்பு | 2 ஆகத்து 1819 கலச மஹால், சென்னை | ||||
அடக்கம் | அசுரத் வாலி தர்கா, திருச்சிராப்பள்ளி | ||||
சமயம் | இசுலாம் |
1801 ஒப்பந்தம்
தொகுஅசிம் உத் தவுலாவின் மாமா இறந்த பின்னர் இவர் அரியணை ஏறினார். அசிம்-உத்-தவுலா அரியணை ஏறியவுடன், கர்நாடக பிரதேசத்தின் குடிமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு கர்நாடக உடன்படிக்கையின் படி வழங்க கட்டாயப்படுத்தப்பட்டார். ஆசிம்-உத்-தொளலா ஒரு பெயரளவு ஆட்சியாளராக அவருடைய ஆதிக்கம் குறைக்கப்பட்டது. இதற்கு கைமறாக, ஆட்சிப் பகுதியின் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கும் மற்றும் 21-பீரங்கி குண்டு மரியாதை கௌரவமும் பெற்றார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் தாமஸ் டே என்பவர் வரைந்த ஆஸிம்-உத்-தொளலாவின் உருவ ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- "AZIM-UD-Daula ( 1801 )". The Royal House of Arcot. Archived from the original on 24 March 2009.