கர்நாடக பிரதேசம்

வரலாற்றுக்கால நிலவியல் பெயர்

கர்நாடகப் பிரதேசம் (Carnatic region) என்பது தென்னிந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும் இடையே உள்ள தற்கால தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நிலப்பரப்புகளைக் குறிக்கும்.

1692ல் அவுரங்கசீப் கைப்பற்றிய கர்நாடகப் பிரதேசங்களை, ஆற்காடு நவாப் மூலம் நிர்வகித்தார். இறுதி ஆற்காடு நவாப் முகமது கவுஸ் கானுக்கு வாரிசு இன்மையால், அவகாசியிலிக் கொள்கையின் படி, 1867ல் கர்நாடக பிரதேசங்கள், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியினரால், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

பெயராய்வு

தொகு

விஜயநகரப் பேரரசு தன்னை கர்நாடக சாம்ராச்சியம் என்று அழைத்துக் கொண்டது. இதற்கும் தற்கால கர்நாடகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆந்திரத்தின் கோரமண்டல் கரைப் பகுதியை ஒட்டி விசயநகர பேர்ரசு ஆண்ட பகுதியே கர்நாடகப் பகுதி என்று கூறுகின்றனர். கர்நாடகம் எனபதற்கு விளக்கம் கூறும் கால்டுவெல் 'கர் என்றால் கறுப்பு. நாடு என்பது தேசம். கரிசல் நிலம் உள்ள பிரதேசம் எனபதால் கர்நாடகம் என்று பெயர் பெற்றது என்று கூறுகிறனர்.' என்றார்.[1]

புவியியல்

தொகு

தென்னிந்தியாவின் தற்கால தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அமைந்த கர்நாடகப் பிரதேசம், கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும் மற்றும் சென்னை மாகாணத்தின் சோழ மண்டலக் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.[2] உண்மையில் இப்பகுதிகள் மைசூர் இராச்சியத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளும் மற்றும் கேரளாவின் பாலக்காடு பகுதிகளும் கொண்டது.

நிர்வாகம்

தொகு

வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையின் 600 கிலோ மீட்டர் நீளமும், 50 முதல் 100 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் வடக்கில் வட சர்க்காரின் குண்டூர் மாவட்டமும், தெற்கில் கன்னியாகுமரி வரை எல்லையாகக் கொண்டது. கர்நாடகப் பிரதேசம் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய கர்நாடக பிரதேசம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

தெற்கு கர்நாடக பிரதேசம்

தொகு

கொள்ளிடம் ஆறு பாயும் திருச்சிராப்பள்ளி வரையிலான பகுதியை தெற்கு கர்நாடகம் என்றும்; இதில் அடங்கிய முக்கிய நகரங்கள், திருச்சிராப்பள்ளி, மதுரை, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகும்.

மத்திய கர்நாடகப் பிரதேசம்

தொகு

மத்திய கர்நாடக பிரதேசத்தின் வடக்கில் பெண்ணாறு முதல் தெற்கில் கொள்ளிடம் ஆறு வரையிலான வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளைக் கொண்டது. மத்திய கர்நாடகப் பகுதியின் முக்கிய நகரங்கள் சென்னை, புதுச்சேரி, ஆற்காடு, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், செங்கம், பழவேற்காடு, நெல்லூர் ஆகும்.

வடக்கு கர்நாடக பிரதேசம்

தொகு

வடக்கு கர்நாடகப் பிரதேசத்தின் ஒங்கோல் முதல் தெற்கில் பெண்ணாறு வரையிலான பகுதிகள் ஆகும். வடக்கு கர்நாடகப் பிரதேசத்தின் முக்கிய நகரம் ஒங்கோல் ஆகும்.

வரலாறு

தொகு

துவக்க காலத்தில் கர்நாடக பிரதேசங்களின் நிலப்பரப்புகள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் கீழிருந்தது. பின்னர் 15ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்நாடக பிரதேசம் விஜய நகரப் பேரரசின் கீழ் வந்தது.

16ம் நூற்றாண்டின் இறுதியில் தக்காண சுல்தான்களால் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்றது. எனவே மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் மற்றும் காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் கர்நாடகப் பிரதேசங்களை ஆண்டனர்.

1674ல் மராத்தியர்கள் தஞ்சாவூரைக் கைப்பற்றி, தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினர். அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855ல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இணைக்கப்பட்டது.

இசுலாமிய ஆட்சியில்

தொகு

1692ல் அவுரங்கசீப் கர்நாடகப் பிரதேசங்களை கைப்பற்றி, அதனை நிர்வகிக்க, ஆற்காடு நவாப்பை தனது பிரதிநிதியாக நியமித்தார். அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின் ஆற்காடு நவாப் முதலாம் சாதுல்லா கான் (1710–1732) தன்னாட்சியுடன் கர்நாடகப் பிரதேசங்களை ஆண்டார்.

பின்னர் பதவிக்கு நவாப் பதவிக்கு வந்த தோஸ்த் அலி கான், 1736ல் மதுரை நாயக்கர்களை வென்று, மதுரை மண்டலத்தை கர்நாடக பிரதேசத்துடன் இணைத்துக் கொண்டார்.

ஆற்காடு நவாப் அன்வருத்தீன் கானின் (1744–1749) இறப்பிற்கு பின்னர், ஆற்காடு நவாப் பதவிக்கு, அன்வருத்தீன் கானின்ன் மகன் முகமது அலி கான் வாலாஜாவிற்கும், மருமகன் சந்தா சாகிப்பிற்கும் இடையே கடும் பிணக்குகள் நிலவியது.

இதனை பயன்படுத்தி, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர் முகமது அலி கான் வாலாஜாவிற்கும், பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியினர் சந்தா சாகிப்பிற்கும் ஆதரவும், படையுதவி செய்தனர். இறுதியாக ஆங்கிலேயர்கள் உதவியுடன் முகமது அலி கான் வாலாஜா 1795ல் இறக்கும் வரை கர்நாடக பிரதேசங்களை ஆண்டார்.

1743ல் மைசூர் மன்னர் ஐதர் அலி, கர்நாடகப் பிரதேசங்கள் மீது படையெடுத்து ஆம்பூர் திருவண்ணாமலை, செங்கம், மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளைக் கைப்பற்றினார்.

ஆங்கிலேயர்கள், கர்நாடகப் போர்கள் மூலம் ஐதர் அலி வென்ற கர்நாடகப் பகுதிகளை கைப்பற்றி சென்னை மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். இறுதி ஆற்காடு நவாப் முகமது கவுஸ் கானுக்கு வாரிசு இன்மையால், அவகாசியிலிக் கொள்கையின் படி, 1867ல் கர்நாடக பிரதேசங்கள், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

1805ல் கர்நாடக பிரதேசத்தில் எஞ்சியிருந்த பாளையக்காரர்களை வென்ற ஆங்கிலேயர்கள், கர்நாடக பிரதேசத்தை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். [2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. எஸ். ராமகிருஷ்ணன் (2017). எனது இந்தியா. சென்னை: விகடன் பிரசுரம். p. 233.
  2. 2.0 2.1   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Carnatic". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 5. (1911). Cambridge University Press. 361–362. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_பிரதேசம்&oldid=3799906" இலிருந்து மீள்விக்கப்பட்டது