முகமது அலி கான் வாலாஜா
முகமது அலி கான் வாலாஜா (Muhammad Ali Khan Wallajah, Muhammad Ali Khan Walla Jah) (7 சூலை 1717 – 13 அக்டோபர் 1795), மூன்றாவது ஆற்காடு நவாப் ஆவார். இவரும், இவரது தந்தையுமான அன்வருத்தீன் கான், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவார்.
தில்லி முகலாயப் பேரரசு 26 ஆகஸ்டு 1765 அன்று முதல் முகமது அலி கான் வாலாஜாவுக்கு தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கியது.
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்கொண்டிருந்த காலத்தில், 1751ல், திருச்சிராப்பள்ளியை கைப்பற்றியிருந்த ஆற்காடு நவாப், தாம் ஐதர் அலி கேட்டுக் கொண்டபடி, திருச்சியை ஐதர் அலியிடம் ஒப்படைக்காததால், ஆங்கிலேயர்களுக்கும், ஐதர் அலிக்கும் இடையே பிணக்குகள் தோன்றியது.
இரண்டாவது ஆங்கில மைசூர் போரின் போது, 23 சூலை 1780 அன்று ஐதர் அலி 86,000 -1,00,000 படைகளை அனுப்பி ஆற்காட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக, ஆங்கிலேயர்கள் ஐதர் அலியின் கட்டுக்குள் இருந்த மாகி கோட்டையைக் கைப்பற்றினார்கள்.
ஆற்காட்டின் பாதுகாப்பிற்காக நவாப், ஆண்டுதோறும் 40,000 பகோடாக்கள் (£160,000) ஆங்கிலேய கம்பெனியினருக்கு செலுத்தினர். அத்துடன் சென்னை மாகாணத்தின் 21 படையணிகளில் 10 படையணிகளை ஆற்காடு நவாப் அரசை காப்பதற்கு அனுப்பப்பட்டது. இதற்கு உதவியாக ஆற்காடு நவாப், தனது நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமைகளை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். [1]
முகமது கான் வாலாஜாவின் இறப்பிற்குப் பின் ஆற்காடு நவாப் ஆன அவரது மகன் உம்தாத் உல் உமரா, நான்காம் ஆங்கிலேய மைசுர் போரின் போது திப்பு சுல்தானுக்கு ஆதரவாக, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்தார்.
இவர் நினைவாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம் பஜார் பகுதியில் வாலாஜா மசூதி கட்டப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "The Tiger and The Thistle – Tipu Sultan and the Scots in India". Natgalscot.ac.uk. Archived from the original on 2006-08-11. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.