ஆம்பூர் போர்

ஆம்பூர் போர் இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் காரணமாக 1749-54 இல் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப் போரின் பகுதியாக நடைபெற்றது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும்[1]. இந்த போரை முசாபர் ஜங் பிரெஞ்சு ஆதரவுடன் சந்தா சாகிப் தலைமையில் தொடங்கினார். இப்போரின்போது (3 ஆகஸ்டு 1749 இல்) அப்போதைய ஆற்காடு நவாப் அன்வருத்தீன் கான் ஆம்பூரில் கொல்லப்பட்டார். இவரது மகன் முகமது அலி கான் வாலாஜா திருச்சிக்குத் தப்பித்துச் சென்று ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். சந்தா சாகிபும் முசாபர் ஜங்கும் முறையே, ஆற்காடு நவாப் ஆகவும்; ஐதராபாத் நிசாம் ஆகவும் பதவியேற்றனர்.

ஆம்பூர் போர்
கர்நாடகப் போர்கள் பகுதி
அன்வருதீன் முகமதுகான் இறப்பு
ஆற்காடு நவாப் ஆம்பூரில் இறந்ததைக் குறிக்கும் சித்திரம்
நாள் 3 ஆகஸ்டு 1749
இடம் ஆம்பூர்
பிரெஞ்சு படைகள் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
சந்தா சாகிப் ஆற்காடு நவாப்பாக பிரகடனப்படுத்தப்பட்டார்
பிரிவினர்
ஆற்காடு நவாப் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி
சந்தா சாகிப்
முசாபர் ஜங்
தளபதிகள், தலைவர்கள்
அன்வருத்தீன் கான் யோசப் பிரான்சுவா தூப்ளே
டி புஸ்சி
சந்தா சாகிப்
முசாபர் ஜங்
ராசா சாகிப்
பலம்
மொத்தம் 20,000
100 யானைப் படைகள்
மொத்தம் 36,000
400 பிரெஞ்சு படையினர்
இழப்புகள்
4,000 1,500

பின்புலம்

தொகு

1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார்[2]. அவரது மகன் நாசிர் ஜங்கும் பேரன் முசாபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை தோஸ்த் அலியின் மருமகனான சந்தா சாகிப் முசாபர் ஜங்குடன் சேர்ந்து, பிரெஞ்சு ஆதரவைப் பெற்று ஆற்காடு நவாபாக முயன்றார். நாசிர் ஜங், ஆற்காடு நவாப் அன்வருத்தீன் கான் மற்றும் அவர் மகன் முகமது அலி கான் வாலாஜா ஆகியோர் பிரித்தானியக் கம்பெனிப் படைகளின் ஆதரவைப் பெற்றிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
  2. https://ta.wikisource.org/wiki/Page:கெடிலக்_கரை_நாகரிகம்.pdf/134
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்_போர்&oldid=2811752" இலிருந்து மீள்விக்கப்பட்டது