பங்கர் ராய்
பங்கர் ராய் (Bunker Roy) இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். சமூக ஆர்வலர், சமூக சேவையாளர். பேர்பூட் கல்லூரியின் நிறுவனர் ஆவார். டைம் பத்திரிகை 2010 ஆம் ஆண்டின் செல்வாக்கான 100 பேரில் ஒருவர் என இவரது கல்விச் சேவைக்காக தேர்ந்தெடுத்திருந்தது..[1]
பங்கர் ராய் | |
---|---|
டைம் பத்திரிகை நிகழ்வில் பங்கர் ராய் | |
பிறப்பு | மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியா |
பணி | சமூக சேவையாளர் & பேர்பூட் கல்லூரி நிறுவனர் |
இளமைக் காலம்
தொகுஇவர் தி டூன் பள்ளியில் (The Doon School) 1956 முதல் 1962 வரை கல்வி கற்றார். 1962 முதல் 1967 வரை தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயின்றார்.[2] சுவர்ப்பந்து விளையாட்டில் 1964-ல் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.[3] உலகச் சாம்பியன் சுவர்ப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்து மூன்று முறை கலந்து கொண்டார்.[2][4]
பேர்பூட் கல்லூரி
தொகுஇவர் பேர்பூட் கல்லூரியைத் தொடங்கினார்.[5] வறட்சியால் பாதிக்கப்பட்ட 100 இடங்களைப் பார்வையிட்டு அது தொடர்பாக 1972-ல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவினார்.[5] இக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் கிராமப்புறங்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதும், மக்களுக்கு மருத்துவம் மற்றும் சூரிய மின் சக்தி தொடர்பாய் பயிற்சி அளிப்பதும் ஆகும்.[5] இவரது கல்லூரியில் இது வரை 30,00,000 பேர் சூரிய சக்தி பொறியாளராகவும், தையல் கலை வல்லுனராகவும், ஆசிரியர்களாகவும், கட்டிட வடிவமைப்பாளர்களாகவும் மற்றும் மருத்துவராகவும் பயிற்சி பெற்றுள்ளனர்.[5]
பிற பணிகள்
தொகு- இந்திய நடுவண் அரசு இவரை ராஜீவ் காந்தி திட்டக் குழுவில் இடம் பெறச் செய்தது.
- டெட் (TED) கலந்துரையாடலில் இவர் பங்கு பெற்றுள்ளார்.[6]
விருதுகள்
தொகு- ஜம்னலால் பஜாஜ் விருது (Jamnalal Bajaj Award )
- சுற்றுச் சூழலுக்கான புனித ஆண்ட்ரூ விருது (St Andrews Prize for the Environment)
- றாபர்ட் ஹில் விருது (Robert Hill Award)
மேற்கோள்கள்
தொகு- ↑ Mortenson, Greg. (2010-04-29) Sanjit 'Bunker' Roy The 2010 TIME 100 பரணிடப்பட்டது 2013-08-17 at the வந்தவழி இயந்திரம். TIME. Retrieved on 2012-06-02.
- ↑ 2.0 2.1 bunker Roy (2006-02-01). Verghese, B. G. (ed.). Tomorrow's India: Another Tryst with Destiny. Penguin Books India. pp. 347–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670058631. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
- ↑ TY - BOOK T1 - Youth A1 - India. Ministry of Education IS - v. 8-11 Page 16 SN - 0513-3289 UR - http://books.google.com/books?id=tC1qqQd6l5wC Y1 - 1964 PB - Ministry of Education of India.
- ↑ Elkington, John; Hartigan, Pamela (2008-02-01). The Power of Unreasonable People: How Social Entrepreneurs Create Markets That Change the World. Harvard Business Press. pp. 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781422104064. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
- ↑ 5.0 5.1 5.2 5.3 John, Mary (2003). Children's Rights and Power: Charging Up for a New Century. Jessica Kingsley Publishers. pp. 232–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781853026584. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
- ↑ TNN (Oct 28, 2012). "'Students untapped forces of social change'". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103203624/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-28/jaipur/34779858_1_tedx-ideas-school-kids. பார்த்த நாள்: 23 November 2012.