அமெரிக்க விடுதலைச் சாற்றுரை

அமெரிக்க விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence) பிலடெல்பியாவில் சூலை 4, 1776 அன்று கூடிய இரண்டாவது தேசியப் பேராயத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். இதன்படி பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் போரில் ஈடுபட்டிருந்த பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றங்கள் [2]தங்களை பதின்மூன்று சுதந்திரமான இறைமையுள்ள நாடுகளாகவும் பிரித்தானிய ஆட்சியின் கீழல்லாதவையாகவும் அறிவித்தன. இவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற புதிய நாட்டை உருவாக்கின. இதனை முன்னெடுப்பதில் ஜான் ஆடம்ஸ் முதன்மைப் பங்காற்றினார். இதற்கான தீர்மானம் சூலை 2 அன்று எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பேராயம் விடுதலையை ஏற்ற தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவிக்க ஐந்து பேரடங்கிய குழு ஒன்று முறையான சாற்றுரையை ஏற்கெனவே வரைந்திருந்தது. இந்தச் சாற்றுரையில் "விடுதலைச் சாற்றுரை" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படவில்லை.

ஐக்கிய அமெரிக்க விடுதலைச் சாற்றுரை
அழுந்திய நகலின் 1823 உருவ நேர்படி
அழுந்திய நகலின் 1823 உருவ நேர்படி
உருவாக்கப்பட்டது சூன்–சூலை 1776
நிறைவேற்றம் சூலை 4, 1776
இடம் பதிந்த நகல்: தேசிய ஆவணகம்
செப்பமற்ற வரைவு: அமெரிக்கக் காங்கிரசு நூலகம்
வரைவாளர் தாமஸ் ஜெஃவ்வர்சன் மற்றும் பலர். (பதிந்தவர்: டிமோத்தி மட்லாக்காக இருக்கலாம்)
கைச்சாத்திட்டோர் இரண்டாம் தேசியப் பேராயத்திற்கு வந்திருந்த 56 சார்பாளர்கள்
நோக்கம் பெரிய பிரித்தானியா விடமிருந்து பிரிந்ததை அறிவிக்கவும் விளக்கவும்[1]
அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் இறுதி வடிவம் பேராயத்திடம் அளிக்கப்படுதல்.

குறிப்புகளும் சான்றுகளும்

தொகு
  1. Becker, Declaration of Independence, 5.
  2. பதின்மூன்று குடியேற்றங்களாவன: டெலவெயர் குடியேற்றம், பென்சில்வேனியா மாகாணம், நியூ செர்சி மாகாணம், சியார்ச்சியா மாகாணம், கனெடிகட் குடியேற்றம், மாசச்சூசெட்ஸ் விரிகுடா மாகாணம், மேரிலாந்து மாகாணம், தென் கரொலைனா மாகாணம், நியூ ஹாம்சயர் மாகாணம், வர்ஜீனியா குடியேற்றம், நியூ யோர்க் மாகாணம், வட கரொலைனா மாகாணம், மற்றும் றோட் தீவு குடியேற்றம். மாசச்சூசெட்ஸ், றோட் தீவு, கனெக்டிகட், நியூ செர்சி ஆகியன முன்பிருந்த குடியேற்றங்களை இணைத்து உருவானவையாம்.