வதையா இறப்பு

வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை (ஒலிப்பு) (ஆங்கிலம்: Euthanasia) என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்தல் ஆகும்.[1].[2] வதையா இறப்புத் தொடர்பான வரையறைகளும் சட்டங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும் பெரும்பான்மை நாடுகளில் இதற்கு சட்ட ஏற்பு இல்லை.

வதையா இறப்பு சமூக, சமய, அரசியல், சட்ட, அறிவியல் நோக்கில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவே இருந்துவருகிறது.

வகைகள்

தொகு

தன்விருப்ப கருணைக்கொலை

தொகு

நோயரின் விருப்பத்தின் பேரில் செய்யப்படுவதாகும். மருத்துவரின் உதவியுடன் நோயரே தன் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதால் இதற்கு உதவி செய்யப்பட்ட தற்கொலை என்ற பெயருமுண்டு.

விருப்பம் பெறவியலா வகை

தொகு

நோயரின் விருப்பத்தைப் பெற இயலா நேரத்தில் செய்யப்படுவது இது. எ.கா: உயிரைப் பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தை, ஆண்டுக்கணக்கில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நபர். இதனை கருணைக் கொலை என்றும் கூறுவர்.

விருப்பற்ற வகை

தொகு

இது நோயரின் விருப்பத்திற்கெதிராக நடத்தப்படுவதாகும். தலைக்கு ஊத்தல் இவ்வகையைச் சேர்ந்ததாகும்.

நடைமுறை வகைகள்

தொகு

முனைப்பு வகை

தொகு

நச்சுப் பொருட்களைப் (முனைப்புடன்) பயன்படுத்தி உயிரை முடிவுக்குக் கொண்டு வருவது முனைப்பு வகை ஆகும். நோயரே கருணைக்கொலைக் கருவியைப் பயன்படுத்தி தன் உயிரை முடிவுக்குக் கொண்டு வரலாம்.

முனைப்பற்ற வகை

தொகு

உயிர் வாழ்வைத் தொடர இன்றியமையாய் இருப்பவற்றை (எ.கா: உயிர் வளி, உணவு, பாக்டீரிய எதிர் மருந்துகள் முதலியன) நிறுத்துதல் முனைப்பற்ற வகையில் அடங்கும்.

நாடுகள் வாரியாக வதையா இறப்பு

தொகு
 
வதையா இறப்பும் உலகநாடுகளின் சட்ட அங்கீகாரமும்

சட்டமாக்கப்பட்டுள்ள நாடுகள்

தொகு

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் வதையா இறப்புக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் வதையா இறப்புச் செய்பவரும் செய்ய உதவுபவர்களும் கடுமையான சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியா

தொகு

இந்தியாவில் வதையா இறப்புத் தொடர்பான சட்ட, சமூக அணுகுமுறை அண்மைக் காலமாக மாறிவரும் ஒன்றாகும். 7 மார்ச் 2011 இது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு முனைப்பற்ற வதையா இறப்பை (passive euthanasia) சட்ட ஏற்புச் செய்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Philippe Letellier, chapter: History and definition of a Word, in Euthanasia: Ethical and human aspects By Council of Europe
  2. Francis Bacon: the major works By Francis Bacon, Brian Vickers p. 630.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வதையா_இறப்பு&oldid=2718736" இலிருந்து மீள்விக்கப்பட்டது