தலைக்கு ஊத்தல்

தலைக்கு ஊத்தல் (Thalaikoothal) அல்லது தலைக்கூத்தல் என்பது தமிழ்நாட்டின், தென்மாவட்டங்களில், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில், முதியவர்களை தலைக்குக் குளிப்பாட்டி கொலை செய்யும் முறையைக் குறிக்கிறது. இம்முறையில் குடும்பத்துக்கு பாரமாகக் கருதப்படும் முதியவர்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டப்படுவர். பின்பு நாள் முழுவதும் அவர்களுக்கு அதிக அளவில் இளநீர் குடிக்கத் தரப்படும், அப்போது எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட முதியவர்களுக்கு, இதனால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இறப்பு ஏற்படும். இச்செயல் இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது. சில நேரங்களில் தலைக்கு ஊத்துவதற்கு பதிலாக குளிர்ந்த பால் தருவது, நஞ்சு ஊசி போடுவது போன்ற செயல்களின் மூலம் முதியவர்கள் கொலை செய்யப்படுவர். பெரும்பாலும் முதியவர்களின் உறவினர்களின் அனுமதியோடு அல்லது உறவினர்களாலேயே இக்கொலைகள் நடத்தப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டு தலைக்கு ஊத்தலில் இருந்து தப்பித்த ஒரு 80 வயது முதியவர் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இந்த சம்பவம் மாவட்ட நிருவாகம் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததால், இந்த முறை பற்றி பரவலாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட நிருவாகம் நடவடிக்கைகள் எடுத்தது.[1][2][3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைக்கு_ஊத்தல்&oldid=3267564" இருந்து மீள்விக்கப்பட்டது