சோரா சேகல் அல்லது ஜோரா சேகல் (Zohra Sehgal, 27 ஏப்ரல் 1912 – 10 சூலை 2014) இந்தியத் திரைப்பட நடிகையும், நடன இயக்குநரும் ஆவார்.[1] சோரா சேகல் 1935 ஆம் ஆண்டில் உதய சங்கரின் நடனக் குழுவில் இணைந்து உள்ளூரிலும், அமெரிக்கா, சப்பான் போன்ற நாடுகளிலும் 8 ஆண்டுகள் நடனமாடினார். 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

சோரா சேகல்
Zohra Sehgal
சோரா சேகல் (மு, இடது), உதய் சங்கர் பலே குழு (1935-37)
பிறப்புசாகிப்சாதி சோரா மும்தாஜ்-உல்லா கான்
(1912-04-27)27 ஏப்ரல் 1912
சகாரன்பூர், ஐக்கிய மாநிலங்கள், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 சூலை 2014(2014-07-10) (அகவை 102)
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்சோரா மும்தாஜ்-உல்லா கான்
பணிநடிகர், நடனம், நடன இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1935–2007
வாழ்க்கைத்
துணை
காமேசுவர் நாத் சேகல்
பிள்ளைகள்கிரான் சேகல்
பவான் சேகல்

தனது 90ஆவது அகவையில் 2002 ஆம் ஆண்டில் சாலோ இஸ்க் லதாயே என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தர்.[3] ஆங்கில மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். பிரித்தானியாவில் ஐடிவி நிறுவனம் தயாரித்த மைன்ட் யுவர் லாங்குவேஜ் என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். தளபதி, உயிரே ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இறுதியாக 2007 ஆம் ஆண்டில் பாஜி ஆன் தி பீச், ஹம் தில் தே சுக்கே சனம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

1998 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருதும், 2001 இல் காளிதாஸ் சம்மன் விருதும், 2004 இல் சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டது. இவரது வாழ்நாள் சாதனைக்காக சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதும் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[4] இவர் 2014 சூலை 10 இல் புது தில்லியில் இதய நிறுத்தம் காரணமாக தனது 102 வது அகவையில் காலமானார்.[5][6][7]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Zohra Sehgal profile at screenonline.org.uk
  2. Zohra Sehgal பிரித்தானிக்கா.
  3. "Zohra Sehgal: Naughty in her 90s!", The Times of India, 8 March 2009.
  4. உட்துறை அமைச்சு(25 சனவரி 2010). "This Year's Padma Awards announced". செய்திக் குறிப்பு.
  5. "Actress Zohra Sehgal dies at 102 due to Cardiac Arrest". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  6. http://www.ndtv.com/article/india/zohra-sehgal-grand-old-lady-of-indian-cinema-dies-at-102-556564?pfrom=home-lateststories
  7. Zohra Sehgal Dies at 102, இந்தியா டுடே, 10 சூலை 2014.
  8. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  9. Padma Awards- theatre personality Zohra Sehgal and... ரெடிப்.காம், 27 சனவரி 1998.
  10. 10.0 10.1 "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரா_சேகல்&oldid=3556267" இலிருந்து மீள்விக்கப்பட்டது